யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழுவின்(UNESCO World Heritage Committee) நாற்பத்து ஆறாவது அமர்வை இந்திய அரசாங்கம், தில்லியின் பாரத் மண்டபத்தில் நடத்தவுள்ளது. Current Affairs Tamil World Heritage Committee
- இந்த அமர்வு ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி, ஜூலை முப்பத்து ஒன்றாம் தேதி முடிவடைய இருக்கிறது.
- இதில், நூற்றைம்பது நாடுகளிலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள், பாரம்பரிய அறிஞர்கள், ஆய்வாளர்கள், போன்றவர்கள் பங்கேற்பார்கள் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோதி அவர்களால் திறந்து வைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
- யுனெஸ்கோ இந்த அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலை ஏற்கனவே வெளியிட்டுவிட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
- இந்த உலக பாரம்பரியக் குழுவில், உலக பாரம்பரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 21 அரசுகளின் பிரதிநிதிகள் உள்ளார்கள். Current Affairs Tamil World Heritage Committee
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய ஒப்பந்தம் என்றால் என்ன?
- உலகில் உள்ள நாடுகளில் பலவகையான கலாச்சாரம் சார்ந்த பாரம்பரியக் கட்டடங்கள் மற்றும் இயற்கையான பாரம்பரிய இடங்கள் உள்ளன.
- இவற்றைப் பாதுகாக்க யுனெஸ்கோ ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து இரண்டாம் ஆண்டு(1972) உருவாக்கின ஒப்பந்தம் தான் உலக பாரம்பரிய ஒப்பந்தம்.
செயல்பாடு:
- நாடுகளை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஊக்குவிப்பது.
- கையெழுத்திட்ட நாடுகளைத் தங்கள் நாட்டுக்குட்பட்ட இடங்களை உலக பாரம்பரியப் பட்டியலில் சேர்ப்பதற்கு ஊக்குவிப்பது.
- பட்டியலில் உள்ள இடங்களைப் பாதுகாப்பதற்கும், அதன் நிலையைத் தெரிவிப்பதற்கான அமைப்பை உருவாக்க நாடுகளை ஊக்குவிப்பது.
- இந்த உறுப்பினர் நாடுகளுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சி வழங்குவது.
- உடனடி ஆபத்தில் இருக்கும் பாரம்பரிய இடங்களுக்கு அவசர உதவி செய்வது.
- பொதுமக்களிடம் இந்த இயக்கத்தின் முக்கியத்துவத்தை கொண்டுசெல்வது.
- இந்த ஒப்பந்தத்தில் எவ்வைகையான இடங்கள் இடம்பெற முடியும் என்பதற்கான அளவுகோல்கள் இருக்கும்.
புடாபெஸ்ட் பிரகடனம்:
- இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு, இந்த ஒப்பந்தத்தின் முப்பது வருடச் செயல்பாட்டினை மறு ஆய்வு செய்து, ஹங்கேரி நாட்டின் தலைநகரமான பூதாபெஸ்டில், ‘புடாபெஸ்ட் பிரகடனம்’ ஏற்றுக்கொள்ளப்பட்டது.
உலக பாரம்பரியப் பட்டியல்:
- நூற்று அறுபத்து எட்டு(168) நாடுகளுடைய ஆயிரத்து நூற்றுத் தொண்ணூற்று ஒன்பது பாரம்பரிய இடங்கள் உள்ளன.
- இந்த பட்டியலுள்ள இடங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன, அவை – இயற்கை சார்ந்த இடங்கள்(Natural), கலாச்சாரம்(Cultural) சார்ந்த இடங்கள் மற்றும் இரண்டும் கலந்தவை(Mixed).
இந்தியாவிலுள்ள இடங்கள்:
- மொத்தம் நாற்பத்து இரண்டு இடங்கள் உள்ளன.
- ஏழு இயற்கையாக உருவான இடங்கள், முப்பத்து நான்கு கலாச்சாரம் சார்ந்த இடங்கள் மற்றும் இரண்டும் கலந்த இடமான கஞ்சஞ்சங்கா தேசியப் பூங்கா.
மாணவர்களுக்கான குறிப்பு :
- UPSC Civil Service GS 1 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
- UPSC Civil Service Prelims மற்றும் TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
- கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தி தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
-அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிரேட் நிக்கோபார் திட்டத்திற்கு அனுமதி!
அஸ்தானாவில் நடக்கும் ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாடு!!!
+1
+1
+1
+1
+1
+1
+1