நகரமயமாக்கலில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலம்:current affairs tamil urbanization
- நகராட்சி நிர்வாகத்துறை பணிகளால் நகரமயமாக்கலில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தமிழக சட்டப் பேரவையில் 1971-1972 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அளித்தபோது,
- நகர்ப்புறங்களின் வசதி வாய்ப்புகளைக் கிராமப்புறத்து மக்கள் ஒரு கால கட்டத்திற்குள் பெற்றிட வேண்டுமென்னும் குன்றா ஆர்வத்துடன் இந்த அரசு செயல்படும் என்று குறிப்பிட்டார் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
- அவ்வாறு குறிப்பிட்டதற்கு ஏற்பவே குடிநீர் வசதி சாலைவசதி மின்விளக்கு வசதி போக்குவரத்து வசதி முதலிய அனைத்து வசதிகளையும் கிராமப்புறங்களில் ஏற்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தியது
- அதன் காரணமாக தமிழகம் மற்ற மாநிலங்களைவிட மிக வேகமாக நகரமயமாகி வந்துள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சி: current affairs tamil urbanization
- இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை 1991-ல் 25.71 சதவீதம் என இருந்தது 2011-ல் 31.16 ஆக உயர்ந்தது.
- அதே நேரத்தில் தமிழகத்தில் நகர்ப்புற மக்கள் தொகை 2011ம் ஆண்டில் 48.45 சதவீதம் என உயர்ந்து இந்திய சராசரியைவிட ஏறத்தாழ 17.29 சதவீதம் அதிகரித்தது.
- இதன் விளைவாக ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவும் பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் நகராட்சிகள் மாநகராட்சியாகவும் வளர்ச்சி பெறுகின்றன.
- ஓர் ஊராட்சியில் 10,000 மக்கள் தொகையும் ரூ.30 லட்சம் வருமானமும் இருந்தால் அந்த ஊராட்சியைப் பேரூராட்சி ஆக்கலாம் என்றும்
- 30,000 மக்கள் தொகையும் ரூ.50 லட்சம் வருமானமும் இருந்தால் அந்தப் பேரூராட்சியை நகராட்சியாக உயர்த்தலாம் என்றும்,
- 3 லட்சம் மக்கள் தொகையும் 30 கோடி ரூபாய் வருமானமும் இருந்தால் அந்த நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தலாம் என்றும் நடைமுறையில் உள்ள விதிகளின் படி,
- தமிழகத்தில் தற்போது 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் 490 பேரூராட்சிகள் உள்ளன.
- ஏற்கனவே 6 மாநகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் காரைக்குடி புதுக்கோட்டை திருவண்ணாமலை நாமக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக உயர்த்தப்படும் என அண்மையில் தமிழக முதல்வர் அறிவித்தார்.
- இப்படி நகர்ப்புற வசதிகள் வளர வளர நகராட்சி நிர்வாகமும் மேலும் வளர்ச்சி பெற்று வருகிறது.
மாணவர்களுக்கான குறிப்பு:
1. UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. சுற்றுசூழல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
-பூஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
உலகின் மிகப்பழமையான குகை ஓவியம்