current affairs tamil tamil pudhalvan scheme

தமிழ்ப்புதல்வன் திட்டம்: விண்ணப்பிப்பது எப்படி?

போட்டித்தேர்வுகள்

உயர் கல்வி பயிலும் மாணவர்கள் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.current affairs tamil tamil pudhalvan scheme

  • உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் ஆகஸ்டு மாதம் முதல் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
  • இந்நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது.

இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்: current affairs tamil tamil pudhalvan scheme

  • இதுகுறித்து சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறையின் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரனின் உத்தரவில் கூறியிருப்பதாவது அரசுப் பள்ளிகளில் (ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம்)
  • அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் மீடியம் மட்டும்) படித்துள்ள மாணவர்கள் தங்களின் இளங்கலை பட்டம் தொழிற்பயிற்சி பட்டயக் கல்வி ஆகியவற்றை பெறும் காலம் வரை ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தப்படுகிறது.

மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: 

  • மத்திய ஆதார் சட்டப்படி சில அறிவுரைகளை பயனாளிகளுக்கு அரசு இதன் மூலம் வழங்குகிறது. இந்த திட்டத்தின் பயனை பெற தகுதியுள்ள மாணவன் தனக்கென்று ஆதார் எண் வைத்திருக்க வேண்டும். அல்லது
  • ஆதார் எண்ணை பெறுவதற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆதார் எண் இல்லாத மாணவர்கள், அந்த எண்ணை பெறுவதற்காக அதற்கான மையங்களுக்கு சென்று விண்ணப்பித்தல் வேண்டும்.
  • ஆதார் எண் இல்லாத நிலையிலும் இந்த உதவித்தொகையைப் பெற மேலும் சில அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை அளிக்க வேண்டும்.
  • அதன்படி, ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்துள்ள அடையாளச் சீட்டு ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்துள்ளதற்கான மனுவின் நகல் வங்கி அல்லது தபால் கணக்கு புத்தகம்,
  • பான் அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட அட்டை, கிசான் கணக்கு புத்தகம், ஓட்டுனர் உரிமம், தாசில்தார் அல்லது கெசடட்(அரசாங்க)அதிகாரி அளித்துள்ள அடையாளச் சான்றிதழ் இவற்றில் ஏதாவது ஒன்றை அளிக்க வேண்டும்.

மாணவர்களுக்கான குறிப்பு:

1. UPSC Civil Service GS-2 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. அரசியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

-பூஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

புதிய வருமான வரி அடுக்குகளில் திருத்தம்!

யூனியன் பட்ஜெட்-பூர்வோதயா திட்டம் என்றால் என்ன?

உத்வேகம் பெற்றது பெண்களுக்கான திட்டங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *