காபி-டேபிள் புத்தகம் சமயபுரம் மாரியம்மன் கோவில் வெளியீடு:

போட்டித்தேர்வுகள்

1,200 ஆண்டுகள் பழமையான காபி-டேபிள் புத்தகம் சமயபுரம் மாரியம்மன் கோவில் வெளியீடு:

  • பிருந்தா ரமணன் எழுதிய ‘சமயபுரம் – சக்தியின் புனித இருக்கை’ என்ற காபி டேபிள் புத்தகத்தை இந்து குரூப் ஆஃப் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது.
  • இது தேவி மாரியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சமயபுரம் கோவிலின் வரலாறு மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை ஆராய்கிறது.current affairs tamil samayapuram
  • பரதநாட்டிய நடனக் கலைஞரும் ஆசிரியருமான விருந்தா ரமணன் மற்றும் பயிற்சி பெற்ற கட்டிடக் கலைஞரான ஜே. ரமணன் ஆகியோரால் எழுதப்பட்ட 190 பக்கங்களை கொண்டது.
  • இந்த புத்தகம் சமயபுரம் கிராமத்தில் ஆட்சி செய்யும் தாய் தெய்வத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு அம்சத்தையும் விவரிக்கிறது.

கோவிலின் வரலாற்று பின்னணி: current affairs tamil samayapuram

  • தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள கோயில் 1,200 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாழ்ந்தது ஆகும்.
  • துர்கா மகாகாளி ஆதி சக்தி அல்லது நிசும்ப சூதினியின் அவதாரமாக நம்பப்படும் மாரியம்மன் தேவியின் புராணங்களுடன் தொடர்புடையது.
  • மாரியம்மன் கோவில் கட்டப்பட்ட காலத்திற்கான வரலாற்று சான்றுகள் இல்லை, ஆனால் அது சோழர் காலத்தில் இருந்ததாக கருதப்படுகிறது .
  • தற்போதைய கோயில் வளாகம் 18 ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் விஜயராய சக்கரவர்த்தியால் கட்டப்பட்டது.
  • தமிழகத்தின் செல்வச் செழிப்பு மிக்க கோவில்களில் இதுவும் ஒன்று.
  • சித்திரை தேர் திருவிழா (சித்திரை – ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தேர் திருவிழா) ஆண்டுதோறும் தமிழ் மாதமான சித்திரை 1 செவ்வாய் அன்று தொடங்கி 13 நாட்கள் கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருவிழாவாகும் .

தற்போதைய செய்தி:

  • பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கவர்ச்சிகரமான படங்களுடன் புத்தகத்தில் மாரியம்மன் தேவி பற்றிய சுவாரஸ்யமான கதைகள் உள்ளன.
  •  தாய் தெய்வம் பழங்கால புராணங்கள் கோவிலின் பண்டிகை கொண்டாட்டங்கள் தெய்வத்திற்கு பூஜைகள் மற்றும் அபிஷேகம் புனித தீர்த்தங்கள் மற்றும் அதீத பக்தி மாரியம்மனுக்கு பக்தர்கள் இது போன்ற  கதைகள் மற்றும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன
  • 1,200 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்த ஆலயம் துர்கா மகாகாளி ஆதி சக்தி அல்லது நிசும்ப சுதினியின் அவதாரமாக நம்பப்படும் மாரியம்மன் தேவியைச் சுற்றிப் பின்னப்பட்ட சுவாரசியமான புராணக்கதைகளைக் கொண்ட வரலாற்றுக் கடந்த காலத்தைக் கொண்டுள்ளது.
  • புத்தகத்தின் முதல் பிரதியை திருச்சி கலெக்டர் எம்.பிரதீப்குமார் முன்னிலையில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.மணிவாசனிடம் திரு.ரமணன் வழங்கினார்.

மாணவர்களுக்கான குறிப்பு:

1. UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. கலாச்சாரம் தெடர்பான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

-பூஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

புதிய தனியார் முதலீட்டுத் திட்டங்களின் மதிப்பு 92% சரிந்தன

பிரதமரின் மாஸ்கோ பயணம்!

வரலாறு காணாத வேலைவாய்ப்பின்மை!

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *