புதிய தனியார் முதலீட்டுத் திட்டங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில்(Q1) 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்தன. current affairs tamil investment
- நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அறிவிக்கப்பட்ட புதிய முதலீட்டுத் திட்டங்களின் மதிப்பு 92% சரிந்து ரூ.59,900 கோடியாக உள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
- (CMIE) தரவுகளின்படி மதிப்பு அடிப்படையில் ஜூன் காலாண்டு செப்டம்பர் 2009 முதல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியதிலிருந்து தனியார் மற்றும் அரசாங்கத்தின் திட்ட அறிவிப்புகளின் மிகக் குறைந்த அளவைப் பதிவு செய்துள்ளது.
காரணம்: current affairs tamil investment
- முதலீட்டு உணர்வு குறைவாக காணப்படுகிறது.
- அதிகப்படியோனோர் ஒரு சில துறைகளில் மட்டுமே குவிந்து காணப்படுகின்றனர்.
- FY25 இல் தனியார் முதலீடு வேகத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் ஒட்டுமொத்த முதலீட்டு செயல்பாடு கடந்த காலத்தைப் போலவே பொது முதலீடுகளைச் சார்ந்திருக்கிறது.
- கடன் வாங்குபவர்கள் மற்றும் வங்கிகள் இருவரின் இருப்புநிலைகள் காலியாக இருப்பதால் லாப அளவுகள் மேம்பட்டு வருகின்றன. மேலும் திறன் பயன்பாடு தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை சுமார் 76% தொட்டது.
- முதலீட்டாளர்களுக்கு இந்தியாவும் லாபகரமான சந்தைகளில் ஒன்றாக உள்ளது.
- ஆனால் நிறுவனங்கள் ரிஸ்க் எடுக்கும் மனநிலையில் இருப்பதாகத் தெரியவில்லை ஒருவேளை தனியார் நுகர்வு ஒற்றை இலக்கத்தில் வளர்ந்து வருவதால் இருக்கலாம்.
- FY23 இல் முதலீடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.9% ஆக இருந்தது இது FY08 இல் காணப்பட்ட 16.8% உச்சத்தை விட குறைவாக இருந்தது.
- FY12 மற்றும் FY19 இன் போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனியார் மூலதன உருவாக்கத்தின் பங்கு 4.6% லிருந்து 3.2% ஆக வீழ்ச்சியடைந்தது.
- மஹிந்திராவின் தலைவரான ஆனந்த் மஹிந்திராவால் இது ஒப்புக் கொள்ளப்பட்டது அவர் உற்பத்தித் துறையை முதலீடுகளை அதிகரிக்க வலியுறுத்தினார்.ஏனெனில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதத்தில் பங்கு ‘கவலைக்குரிய நிலைக்கு’ வீழ்ச்சியடைந்தது.
- இயல்புநிலையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் நுகர்வை புதுப்பிக்க அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
மாணவர்களுக்கான குறிப்பு:
1. UPSC Civil Service GS-2தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. பொருளாதாரம் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
-பூஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஜிகா வைரஸ் பரவல் : மத்திய அரசு எச்சரிக்கை
போட்டித் தேர்வு நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு சட்டம் 2024
யார் இந்த கெய்ர் ஸ்டார்மர் !!!