பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு மேற்பட்ட இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றிபெற்றிருக்கும் நிலையில் கீர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமரானார்.current affairs tamil keir starmer
- பிரிட்டனில் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது. இங்கிலாந்தில் இதுவரை எந்த கட்சியும் தொடர்ந்து 5 ஆவது முறை ஆட்சி அமைத்ததில்லை. அந்த வரிசையில் 4 முறை தொடர்ந்து அரியணையில் அமர்ந்திருந்த கன்சர்வேட்டிவ் கட்சியும் தற்போது தோல்வியை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. current affairs tamil keir starmer
- 14 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர் கட்சி பிரிட்டனில் ஆட்சியை பிடித்துள்ளது பிரக்சிட் எனப்படும் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் நாடு வெளியே வந்த பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரிட்டன் பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை எதிர்கொண்டன.
- முன்னதாக பிரதமர் ரிஷிசுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி கடுமையான தோல்வியை சந்திக்கும் எனவும் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் கூறப்பட்டு இருந்தது.
- அதே சமயம் கீர் ஸ்டார்மரும் தான் போட்டியிட்ட தொகுதியில் அமோக வெற்றி பெற்றார். தொழிலாளர் கட்சி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரியணை ஏறியது.
யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்:
- கெய்ர் ஸ்டார்மர் செப்டம்பர் 2 1962 இங்கிலாந்தில் பிறந்தவர் ஆவார்.
- ஒரு பிரிட்டிஷ் அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர் ஆவார்.
- அவர் 2020 இல் தொழிலாளர் கட்சியின் தலைவராக ஆனார். அவர் 2015 முதல் ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ராஸ் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.
- ஜூலை 4, 2024 அன்று நடந்த பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சியின் அமோக வெற்றிக்குப் பிறகு ரிஷி சுனக்கிற்குப் பதிலாக ஐக்கிய இராச்சியத்தின் அதாவது பிரிட்டனின் பிரதமரானார்.
மாணவர்களுக்கான குறிப்பு:
1. UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. அறிவியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக
-பூஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்
ஸ்மார்ட் சிட்டி இயக்கம் நீட்டிப்பு!