current affairs tamil VVP

சீன எல்லையில் உள்ள கிராமங்களுக்கு 4G!

போட்டித்தேர்வுகள்

கடந்த சனிக்கிழமை (13-07-2024) அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பு ஒன்றில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் (Vibrant Villages Programme) செயல்பாட்டினை மீளாய்வு செய்தார். current affairs tamil VVP

இந்தத் திட்டம், சீன எல்லையில் உள்ள கிராமங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஆரம்பிக்கப் பட்டது.

மேலும், ஒன்றிய அரசாங்கம், எல்லை கிராமங்களின் முழு வளர்ச்சிக்குப் பாடுபடும், அங்கிருக்கும் உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித்தரும், மற்றும் புலம்பெயர்வைத் தடுக்கும் என்று அமித் ஷா கூறினார். current affairs tamil VVP

டிசம்பர் மாதத்திற்குள், இந்த கிராமங்களில் 4G சேவை நிறுவ, வேலைகள் துரிதமாக நடந்துகொண்டிருக்கிறது என்று அமித் ஷா தெரிவித்தார்.

கூடவே, சுற்றுலாவை ஊக்குவிக்க இக்கிராமங்களில் சுற்றுலாத் தடங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த துடிப்பான கிராமங்கள் திட்டத்தினைக் கண்காணிக்க, “பிரதம மந்திரி கடி சக்தி” தளத்துடன் இத்திட்டத்தினை இணைக்க வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

துடிப்பான கிராமங்கள் திட்டம் (Vibrant Villages Programme):

  • பிப்ரவரி 14, 2023 இல் இத்திட்டம் உள்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
  • அருணாச்சல பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், உத்தராகண்ட் மற்றும் லடாக்கின் வடக்கு எல்லைகளில் உள்ள கிராமங்களை வளர்ச்சியடைச் செய்வதுதான் இத்திட்டத்தின் குறிக்கோள்.
  • 2963 கிராமங்கள் இத்திட்டத்தால் பயன்பெறும்.
  • தற்போது ₹2420 கோடி செலவில் உருவாக்கப்பட்ட, எல்லா வானிலையிலும் தாக்குப்பிடிக்கக் கூடிய சாலைகள், 136 கிராமங்களை இணைத்துள்ளன.
  • இது ஒரு மத்திய நிதியுதவி பெறும் திட்டம் (Centrally Sponsored Scheme). அப்படி என்றால், ஒன்றிய அரசாங்கம் இத்திட்டத்தினைச் செயல்படுத்தத் தேவையான பணத்தில், ஒரு குறிப்பிட்ட பங்கைத் தரும், மீதிப் பங்கை அந்தந்த மாநிலங்கள் தர வேண்டும்.
குறிக்கோள்கள்:
  • ஒவ்வொரு கிராமங்களின் தனிப்பட்ட மனித வளங்கள், தேவைகளுக்கு ஏற்ப வளர்ச்சித் திட்டத்தை வகுப்பது.
  • சுற்றுலாவை ஊக்குவிப்பது.
  • கூட்டுறவு நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் நிலைத்து நிற்கக்கூடிய விவசாயம் சார்ந்த வணிகங்களை உருவாக்குவது.
  • முக்கியமாக, நாட்டின் பாதுகாப்பு தேவையைக் கருதி, லடாக்கின் எல்லைப் பகுதிகளை இனைக்க, நிமு-பதம்-தர்ச்சா சாலையில், 4.1 கிமீ நீளத்திற்கு ஒரு சுரங்கப்பாதை டிசம்பர் 2025 முடிவிற்குள், அமைக்கப்படவிருக்கிறது.

மாணவர்களுக்கான குறிப்பு :

  • UPSC Civil Service GS 2 & 3 தாள்களுக்கு மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
  • UPSC Civil Service Prelims மற்றும் TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
  • பொருளாதார வளர்ச்சி சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தி தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

-அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

சம்விதான் காய திவாஸ் Vs மோடி முக்தி திவாஸ்!

மணிப்பூர் குறித்து மௌனம் கலைத்த பிரதமர் மோடி

உணவுப் பணவீக்கம் 9.36% ஆக உயர்ந்துள்ளது

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *