Shows the Pushpak Reusable Launch Vehicle on a runway

“புஷ்பக்” ஏவுகலத்தின் இறுதிகட்ட தரையிறங்கும் சோதனை வெற்றி!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(ISRO) புஷ்பக்(Pushpak) என்கிற மறுபயனுறு ஏவுகலத்தின் இறுதிகட்டத் தரையிறங்கு சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. Pushpak current affairs

இஸ்ரோ பல வருடங்களாக செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி வாகனங்கள் மூலம் விண்ணில் செலுத்திவந்தது. ஆனால் இவ்வாகனங்களை ஒரு முறை தான் பயன்படுத்த முடியும். இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

இந்த செலவை புஷ்பக் ஏவுகலம் கணிசமாக குறைக்கும் என்று நம்புகிறது.

புஷ்பக் மறுபயனுறு ஏவுகலம்(Pushpak: Reusable Launch Vehicle) Pushpak current affairs

  • புஷ்பக் ஏவுகலம் இறக்கை வைத்த சிறு விமானம் போல் காட்சியளிக்கும்.
  • இக்கலம் வானில் பறந்து சென்று செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்தி விட்டு, மறுபடியும் பூமிக்கு திரும்புமாறு வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • அதற்காக பல்வேறு சோதனைகளை இஸ்ரோ உருவாக்கியிருந்தது.
  • அதில் ஒன்று, தரையிறங்கும் சோதனை. இது மூன்று கட்டங்களாக பிரிக்கப் பட்டது.
  • முதல் சோதனை 2016 இலும்,(LEX-01) இரண்டாம் கட்ட சோதனை 2023இலும்(LEX-02) வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
  • கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்றாம்கட்ட சோதனை(LEX-03) கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்டது.
  • இந்த சோதனையில், புஷ்பக் ஏவுகலம் “சினூக்” ஹெலிகாப்டரின் மூலம் தரையில் இருந்து 4.5 கி.மீ உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது.
  • விடுவிக்கப்பட்டதும், புஷ்பக் ஏவுகலம் கச்சிதமாக குறிப்பிடப்பட்ட விமான ஓடுதளத்தில் பாராசூட் மற்றும் ஏவுகலத்தின் உள்ளிருக்கும் கணினிகளின் உதவியுடன் தரையிறங்கியது.

மாணவர்களுக்கான குறிப்பு:

  1. UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
  2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
  3. அறிவியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

-அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்

ரூ.4,000 கோடியில் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு!

மக்களவையில் எம்.பியாக பதவியேற்றார் பிரதமர் மோடி

கள்ளச்சாராய மரணத்தில் சிபிஐ விசாரணை: ஆளுநரிடம் பாஜக மனு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts