கிரேட் நிகோபார் திட்டம் : பாதிப்பிற்கு உள்ளாகும் 2 முக்கிய உயிரினங்கள்!

Published On:

| By Minnambalam Login1

Leatherback Turtle and Megapode

இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ள கிரேட் நிகோபார் திட்டத்தினால் அங்குள்ள முக்கிய உயிரினமான ஜையண்ட் லெதர்பேக் டர்டிலிற்க்கும்( Giant Leatherback Turtle) மற்றும் நிகோபார் மெகாபோட்(Megapode) என்றழைக்கப்படும் பறவை இனம் பாதிப்பிற்குள்ளாகும் என்று சொல்லப்படுகிறது.current affairs giant leatherback turtle

கிரேட் நிக்கோபார் திட்டம் என்பது இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் கிரேட் நிக்கோபார் தீவில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி முயற்சியாகும். இந்த திட்டம் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.current affairs giant leatherback turtle

கிரேட் நிகோபார் தீவில் இருக்கும் கெலத்தியா பே(Galathea Bay) வனவிலங்கு சரணாலயம் மற்றும் மேகாபோட் சரணாலயம் தான் இந்த இரண்டு உயிரினங்களுக்கான முக்கிய இருப்பிடம்.

  • ஜையண்ட் லெதர்பேக் டர்டில் (Giant Leatherback Turtle)

    • இந்த உயிரினம் வன உயிர் பாதுகாப்புச் சட்டம் 1972, அட்டவணை 1 இல் உள்ளது.
    • வன உயிர் பாதுகாப்பு சட்டத்தில் மொத்தம் ஆறு அட்டவணைகள் உள்ளன. அட்டவணை ஒன்றில் உள்ள உயிரினங்கள் இருப்பதிலேயே முக்கியமானதும் பாதுகாக்க பட வேண்டிய ஒன்றாகும்.
    • இந்த டர்டில் வகை கிரேட்ன் நிகோபார் தீவிற்கு முட்டையிடுவதற்காக நவம்பர் மாதம் வந்து, மார்ச் மாதம் வரை இருக்கும்.
    • இதன் ஐ.யு.சி.என் நிலை(IUCN status) – பாதிக்கப்படக்கூடியவை(Vulnerable) ஆகும்.
  • நிகோபார் மெகாபோட்(Megapode)

    • இது ஒரு பறவை வகை.
    • இதுவும் வன உயிர் பாதுகாப்புச் சட்டம் 1972, அட்டவணை 1 இல் உள்ளது.
    • இதன் ஐ.யு.சி.என் நிலை(IUCN status) – பாதிக்கப்படக்கூடியவை(Vulnerable) ஆகும்.

மாணவர்களுக்கான குறிப்பு:

  1. UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
  2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
  3. அறிவியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

-அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

“புஷ்பக்” ஏவுகலத்தின் இறுதிகட்ட தரையிறங்கும் சோதனை வெற்றி!

‘கவச்’ இருந்தால் இரயில் விபத்துகள் நடக்காது : எப்படி?

கிரேட் நிக்கோபார் திட்டத்திற்கு அனுமதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel