ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இனி நடத்தவிருக்கும் தேர்வுகளில் ஆதார் அடிப்படையில் கைரேகை சரிபார்த்தல், சிசிடிவி, முக அங்கிகார அமைப்பு (facial recognition system) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த உள்ளது. current affairs tamil upsc
சமீபத்தில் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் நடந்த குளறுபடிகள் மற்றும் போலி சான்றிதழ்களை சமர்ப்பித்ததாகச் சொல்லப்படுகிற ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா கெத்கரால் உருவான சர்ச்சை போன்றவற்றினால் இந்த முடிவை தேர்வாணையம் எடுத்திருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
ஜூன் 20 அன்று ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் மேற்குறிப்பிட்ட சேவைகளை வழங்குவதற்காக, பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து ஏலம் கோரியுள்ளது. current affairs tamil upsc
பரீட்சை எழுதும் சமயத்தில் தேர்வர்கள் மோசடி செய்யாமல் இருக்க, அவர்களை அதிநவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் கண்காணிக்க முடிவெடுத்திருப்பதாக ஏல ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏலம் எடுக்கும் நிறுவனத்திற்குத் தேர்வாணையம், தேர்வர்களின் விபரங்களைத் தரும். அதை வைத்து அந்த நிறுவனம் ஆதாரில் உள்ள கைரேகை மற்றும் முக அங்கிகார அமைப்பின்(Facial Recognition System) மூலம் சரிபார்க்கவேண்டும்.
மேலும், பரீட்சை நடக்கும் மையங்களைச் சிசிடிவி மூலம் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்கத் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
இதற்குத் தேவையான ஏற்பாடுகளை அந்த நிறுவனமே செய்யவேண்டும்.
பயோமெட்ரிக்ஸ் (Biometrics) என்றால் என்ன?
- பயோமெட்ரிக்ஸ் என்பது, ஒரு மனிதனின் உடல் அளவீடுகளின் கணக்கீடாகும். இதன் மூலம் நாம் ஒவ்வொரு நபரையும் தனித்து அடையாளம் காட்டலாம்.
- கைரேகை, கருவிழி, முக அமைப்பு, குரல் போன்ற அடையாளங்களை (identifiers) பயன்படுத்தி நாம் ஒரு மனிதனை அடையாளம் காட்டலாம். ஏன் என்றால் இவை அனைத்தும் தனித்துவமானவை.
- இதற்காகத் தான் ஆதார் அட்டையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இந்த அட்டையில் ஒவ்வொரு நபரின் கைரேகைகள், கருவிழிகள், முக அமைப்பு விபரங்கள் பதிவாகியுள்ளன.
தற்போது நாம் எங்கெல்லாம் பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்திவருகிறோம்?
- வங்கியிலிருந்து கைரேகை மூலம் பணம் எடுக்கும்பொழுது.
- நியாய விலைக்கடைகளில்.
- ஓய்வூதியம் வாங்குவதற்காக வருடம் ஒருமுறை வாழ்வு சான்றிதழ் (Life Certificate) எடுக்கும் பொழுது.
இவை சில உதாரணங்கள்தான். இதுபோல பல இடங்களில் நாம் பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்துகிறோம்.
மாணவர்களுக்கான குறிப்பு:
- UPSC Civil Service GS 3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
- UPSC Civil Service Prelims க்கு உதவும்.
- தொழில்நுட்பம் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்தச் செய்தித் தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
நிபா நோய்த்தொற்றால் சிறுவன் பலி!
யூனியன் பட்ஜெட்-பூர்வோதயா திட்டம் என்றால் என்ன?
கடும் வெப்பத்தால் பாதிப்பிற்குள்ளாகும் பெண்கள்!