shows the text Unemployment

வரலாறு காணாத வேலைவாய்ப்பின்மை!

போட்டித்தேர்வுகள்

கடந்த நாற்பத்து ஐந்து ஆண்டுகளில், இந்தியா இப்போது சந்தித்துக்கொண்டிருக்கும் வேலைவாய்ப்பின்மைதான் மிகவும் அதிகம் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கடந்த ஞாயிறு அன்று தெரிவித்துள்ளார். current affairs tamil unemployment

நமது நாட்டில் உள்ள குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்தான், மிகவும் அதிகமான வேலைவாய்ப்பை வழங்கி வருவதாகவும், அந்த நிறுவனங்களின் நலிவே, இந்த வேலைவாய்ப்பின்மைக்குக் காரணம் என்றார்.

மேலும் பணமதிப்பிழப்பு, அவசரமாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி, அதிகரித்துக்கொண்டிருக்கும் சீன இறக்குமதிகள் போன்றவைதான் மேற்குறிப்பிட்ட நலிவிற்குக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். current affairs tamil unemployment

அமெரிக்க நிறுவனமான சிட்டிகுழுமத்தின் அறிக்கை ஒன்று, இந்தியா சந்தித்துக்கொண்டிருக்கும் வேலைவாய்ப்பின்மைக்கான காரணம் பல்முகம்கொண்டது எனவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏழு சதவீதத்தில் வளர்ந்தால் கூட வேலைவாய்ப்பின்மையைக் குறைக்க உதவாது என்று தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசாங்கத்தின் குறிப்பிட்ட காலத் தொழிலாளர் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey) மற்றும் தனியார் நிறுவனமான இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (Centre for Monitoring Indian Economy) அறிக்கைகளை வைத்துத்தான் இந்த முடிவிற்கு சிட்டிகுழுமம் வந்ததாகத் தெரிவித்துள்ளது.

தொழில் பயிற்சி வழங்குவது, சொந்தத் தொழில் தொடங்குவதற்குக் கடன் வழங்க திட்டம் அமைப்பது, பெரிய அளவிலான வீடுகளைக் கட்டுவதற்குத் திட்டம் அமைப்பதின் மூலம் கட்டுமானத்துறையில் வேலைவாய்ப்பை அதிகரிப்பது போன்ற செயல்களின் மூலம் வேலைவாய்ப்பைப் பெருக்கலாம் என்று அந்தக் குழுமம் கூறியுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எவ்வாறு வரையறுக்கப்படுகின்றன?

ஒன்றிய அரசாங்கத்தின் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் இந்த நிறுவனங்களை வரையறுக்கச் சில விதிகளை உருவாக்கியுள்ளது. அவை பின்வருமாறு:

குறு நிறுவனம்:

சரக்கு தயாரிக்கப் பயன் படுத்தப்படும் இயந்திரங்களில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு ஒரு கோடி ரூபாய்க்குட்பட்டும், ஆண்டு வருவாய் ஐந்து கோடி ரூபாய்க்குட்பட்டும் இருக்கவேண்டும்.

சிறு நிறுவனம்

சரக்கு தயாரிக்கப் பயன் படுத்தப்படும் இயந்திரங்களில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு பத்து கோடி ரூபாய்க்குட்பட்டும், ஆண்டு வருவாய் ஐம்பது கோடி ரூபாய்க்குட்பட்டும் இருக்கவேண்டும்.

நடுத்தர நிறுவனம்:

சரக்கு தயாரிக்கப் பயன் படுத்தப்படும் இயந்திரங்களில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு ஐம்பது கோடி ரூபாய்க்குட்பட்டும், ஆண்டு வருவாய் இருநூற்று ஐம்பது கோடி ரூபாய்க்குட்பட்டும் இருக்கவேண்டும்.

குறிப்பிட்ட கால தொழிலாளர்களின் கணக்கெடுப்பு எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

  • இந்த கணக்கெடுப்பு ஒன்றிய அரசாங்கத்தின், புள்ளியில் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புள்ளியியல் நிறுவனத்தால் 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
  • இதன் குறிக்கோள், இந்தியாவின் வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மையின் சதவீதங்களைக் கணக்கெடுப்பது.
  • நகர்ப்புற உழைக்கும் மக்கள் பற்றிய தகவலை இந்த நிறுவனம் ஒவ்வொரு மூன்றுமாத இடைவெளியில் வெளியிடும்.
  • கிராமப்புற உழைக்கும் மக்கள் பற்றிய தகவலை ஆண்டிற்கு ஒருமுறை வெளியிடும்.

மாணவர்களுக்கான குறிப்பு :

  • UPSC Civil Service GS 3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
  • UPSC Civil Service Prelims மற்றும் TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
  • பொருளாதாரம் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தி தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

-அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

உலக பாரம்பரியக் குழுவின் நாற்பத்து ஆறாவது அமர்வு

அஸ்தானாவில் நடக்கும் ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாடு!!!

வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0