போர்ச்சுக்கல் நாட்டின் பிராகா நகரத்தில் திங்கள்கிழமை தொடங்கிய யுனெஸ்கோ படைப்புத்திறன் கொண்ட நகரங்களிற்கான வலைப்பின்னல்(UNESCO CREATIVE CITIES NETWORK) மாநாட்டில், கேரளாவின் கோழிக்கோடும் மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரமும் தேர்வாகியுள்ளன. current affairs tamil creative cities
கோழிக்கோடு இலக்கிய நகரமாகவும், குவாலியர் இசை நகரமாகவும் யுனெஸ்கோ படைப்பு நகரங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. current affairs tamil creative cities
யுனெஸ்கோவின் படைப்புத்திறன் கொண்ட நகரங்களின் பட்டியல்:
- யுனெஸ்கோ, கைவினைப்பொருட்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை, வடிவமைப்பு, திரைப்படம், உணவியல், இலக்கியம், ஊடக கலைகள் மற்றும் இசை என ஏழு தலைப்புகளின் கீழ் உலகநாடுகளிலிருந்து நகரங்களைத் தேர்வு செய்யும்.
- இந்த முன்னெடுப்பு இரண்டாயிரத்து நான்காம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
- இதன் குறிக்கோள், உலக நகரங்களுக்கு இடையே கலை சார்ந்த ஒத்துழைப்பு உண்டாக்குவதும், மனித வாழ்வில் கலையை ஓர் அங்கமாக்குவதுவும்.
- இந்தப் பட்டியல் 2030 நிலையான வளர்ச்சி இலக்குகளை (2030 Sustainable Development Goals) எட்டுவதற்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
- இந்தப் பட்டியலில் மொத்தம் முந்நூற்று ஐம்பதிற்கும் மேலான நகரங்கள் இருக்கின்றன.
இந்திய நகரங்கள்:
ஜெய்ப்பூர் – கைவினைப்பொருட்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை (2015)
வாரணாசி – இசை (2015)
சென்னை- இசை (2017)
மும்பை- திரைப்படம் (2019)
ஹைதராபாத் – உணவியல்(2019)
ஸ்ரீநகர் – கைவினைப்பொருட்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை (2021)
கோழிக்கோடு – இலக்கியம் (2024)
குவாலியர் – இசை (2024)
கோழிக்கோடின் முக்கியத்துவம்:
- கோழிக்கோடில் ஒவ்வொரு ஆண்டும் இலக்கியத் திருவிழா நடக்கும் மற்றும் பல நூலகங்கள் அமைந்துள்ளன.
- இலக்கிய நகரம் என்று தேர்வாகியுள்ள முதல் நகரம் கோழிக்கோடு.
குவாலியரின் முக்கியத்துவம்:
- ஹிந்துஸ்தானி இசைக்குடும்பத்தில் ஒன்றான குவாலியர் கரானா (Gwalior Gharana) புகழ்பெற்ற ஒன்றாகும்.
- டான்சென் சங்கீத் சமாரோஹ் என்ற இசை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் குவாலியரில் நடக்கும்.
- முகலாய மன்னர் அக்பரின் அவையில் இருந்த நவரத்தினங்களில் ஒருவரான டான்செனின் பிறப்பிடம் குவாலியர் என்று நம்பப்படுகிறது.
யுனெஸ்கோ:
- ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தைந்தாம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த அமைப்பு முதன் முதலாகக் கூடியது.
- இரண்டாம் உலகப் போரில் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகள் கல்வி மற்றும் கலாச்சாரத்தை மறுகட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் யுனெஸ்கோ.
- இதன் தலைநகரம் – பாரிஸ், ஃபிரான்ஸ்
- இதன் அலுவல் மொழிகள் – அரபி(Arabic), சைனீஸ்(Chinese), ஆங்கிலம்(English), ஃபிரென்ச்(French), ரஷ்யன்(Russian) மற்றும் எஸ்பான்யோல்(Spanish).
மாணவர்களுக்கான குறிப்பு:
- UPSC Civil Service GS-1 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
- UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group 2 மற்றும் Group 1 Prelimsக்கு உதவும்.
- கலாச்சாரம் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
-அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….