உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்!

Published On:

| By Minnambalam Login1

A city in ukraine being attacked

திங்கள் அன்று உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலால், முப்பத்து ஒரு பேர்  பலி ஆகியுள்ளார்கள் மற்றும் நூற்றைம்பதிற்கும் மேலான மக்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். current affairs tamil russia ukraine

ரஷ்யா நாற்பதுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளைப் பயன்படுத்தி, உக்ரைனின் ஐந்து முக்கிய நகரங்களைத் தாக்கியுள்ளது.

தலைநகர் கீவ்வில் ஒரு குழந்தைகளுக்கான மருத்துவமனை தாக்கப்பட்டிருக்கும் எனவும், அந்த இடிபாடுகளிலிருந்து மக்களை மீட்பதற்கு மீட்பாளர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாஷிங்டனில் நடக்கவிருக்கும் நேட்டோவின் உச்சி மாநாடு ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்னாடி இந்தத் தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. current affairs tamil russia ukraine

ரஷ்யா-உக்ரைன் வரலாற்றுப் பின்னணி:

  • உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்குமான கலாச்சார ரீதியான, மொழி ரீதியான, சமூக ரீதியான உறவு பல நூறு ஆண்டுகளுக்கு முன் செல்லும்.
  • இரண்டு நாடுகளுக்கும் உள்ள மக்களுக்கு இது ஓர் உணர்ச்சிகரமான உறவு.
  • உக்ரைன் மற்றும் ரஷ்யா சோவியத் ஒன்றியத்தின் அங்கமாக இருந்தவை. ரஷ்யாவிற்கு அடுத்து அந்த ஒன்றியத்தில் உக்ரைன்தான் மிகவும் சக்தி வாய்ந்த குடியரசாக விளங்கியது.

மோதலுக்கான காரணங்கள்:

  • சோவியத் ஒன்றியம் உடைந்த பிறகு, ரஷ்யாவும் மேற்குலக நாடுகளும் உக்ரைன் மீது தங்கள் செல்வாக்கை திணிக்க முயன்று வந்தன.
  • இதற்குக் காரணம், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ரஷ்யாவிற்கும் நடுவே உக்ரைன் உள்ளது. அதனால் அதன் மீது செல்வாக்கு செலுத்துவது புவி அரசியல் ரீதியாகப் பயனுள்ளதாக இருக்கும் என்று இரு தரப்பும் நம்பியது.
  • மற்றும் உக்ரைன் அருகில் உள்ள கருங்கடல் மிகவும் முக்கியமான பகுதி. வியாபாரம் ரீதியான கப்பல் போக்குவரத்து மற்றும் ராணுவத் தேவைகளுக்கு இந்தக் கடல் ரஷ்யாவிற்குத் தேவைப்பட்டது.
  • 2014 ஆம் ஆண்டு உக்ரைனின் டோன்பாஸ் ( டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்) பகுதியில், ரஷ்யாவிற்கு ஆதரவான பிரிவினைவாத இயக்கங்கள் செயல்படத் தொடங்கின.
  • அதன் தொடர்ச்சியாக, உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை ரஷ்யா வலுக்கட்டாயமாகத் தன்னுடன் இணைத்துக்கொண்டது.
  • இதற்கு பின் உக்ரைன் நேட்டோ அமைப்பிடம் தன்னையும் ஓர் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளும்படி கேட்க ஆரம்பித்தது.
  • ஏற்கனவே, கருங்கடல் சுற்றியுள்ள நாடுகளான பல்கேரியா, ரொமேனியா, துர்கியே நேட்டோவில் உறுப்பினராக உள்ளனர். உக்ரைனும் அதில் சேர்ந்தால், அது ரஷ்யாவிற்குச் சங்கடமாகப் போய்விடும்.
  • அதனால், ரஷ்யா உக்ரைன் மீது 24, பிப்ரவரி 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போர் மிகவும் விரைவாக முடிந்துவிடும் என்று ரஷ்யா எதிர்பார்த்தது.

ஆனால் போர் மூன்றாம் ஆண்டில் உள்ளது. இதற்குக் காரணம், நேட்டோ உறுப்பின நாடுகள் உக்ரைனிற்கு எல்லாவிதமான உதவியும் செய்து வருகின்றன.

போரின் விளைவுகள்:

  • கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் மற்றும் பல பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது.
  • இந்தப் போர் நீண்டுகொண்டே போனால், உலக பொருளாதாரம் ஆழமாகப் பாதிக்கப்படும்.
  • மூன்றாம் உலகப் போருக்குக் கூட இது வித்திடக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மாணவர்களுக்கான குறிப்பு :

  • UPSC Civil Service GS 2 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
  • UPSC Civil Service Prelims மற்றும் TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
  • சர்வதேச அரசியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தி தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

-அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

நேட்டோ தலைவரானார் மார்க் ரித்த.

சிந்து நதி நீர் ஒப்பந்தம்

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர் !!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share