tamil current affairs nep

தேசிய கல்விக் கொள்கை மீளாய்வுச் சந்திப்பு!.

ஒன்றிய கல்வி அமைச்சகம் செவ்வாய் அன்று (9/7/2024), நடைமுறைப் -படுத்தப்பட்டுள்ளதேசியக் கல்விக் கொள்கையின் போக்கை மீளாய்வு செய்ய இரண்டு நாள் சந்திப்பைத் தொடங்கிவைத்தது. tamil current affairs nep

  • தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், கேந்திரிய மற்றும் நவோதயா வித்யாலயாவின் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை அன்று இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
  • இந்தச் சந்திப்பின் முக்கியத்துவம்,தேசியக் கல்விக் கொள்கை, 2020 நடைமுறைப்படுத்துதலையும், ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்டங்களான ‘சமகிர சிக்ஷா (Samagra Shiksha)’, ‘பிரதம மந்திரி ஸ்ரீ’(PM Shri),’பிரதம மந்திரி போஷான் (PM Poshan)’ மற்றும் ‘உள்ளாஸ் (ULLAS)’ திட்டங்களை மறு ஆய்வு பண்ணுவதாகும் என்று அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்தார்.
  • மேலும், ஐந்து வருடச் செயல்திட்டம், நூறு நாள் செயல்திட்டம்; சமகிர சிக்ஷா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு பணிகள், வித்யா சமிக்ஷா கேந்திரா மற்றும் 200 கல்வி சேனல்கள் அமைப்பது பற்றி, கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்புக்கான தரவு, மற்றும் பள்ளி பருவத்தில் இருக்கும் மாணவர்களிடம் புகையிலையின் ஆபத்தைக் குறித்த விழிப்புணர்வு போன்றவற்றைப் பற்றி விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
  • கூட்டத்தில் பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தாய்மொழியில் கல்வி கற்பதின் அவசியத்தை எடுத்துக்கூறி, மாநிலங்களை ஒன்றிய அரசுடன் சேர்ந்து பயணிக்குமாறு வலியுறுத்தினார்.
  • இந்தியாவில் முதல்முறையாக, இந்திய தொழில்நுட்பக் கழகம், ஜோத்பூர் (IIT, Jodhpur) தொழில்நுட்பம் இளங்கலைப் பட்டத்தை இந்தியிலும், ஆங்கிலத்திலும் வழங்கவிருக்கிறது.

தேசியக் கல்விக் கொள்கை 2020:

  • இந்தக் கல்விக் கொள்கை, இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. tamil current affairs nep
  • இது இந்தியாவின் மூன்றாவது தேசியக் கல்விக் கொள்கை.
  • 1968-இல் முதல் தேசியக் கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது.
  • 1986-இல் இரண்டாவது தேசியக் கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது.
  • 2020 தேசியக் கல்விக் கொள்கை இந்தியாவை  உலகளவில், அறிவுத்துறையில் வல்லரசாக மாற்றத் திட்டமிட்டுள்ளது.

சில முக்கிய புள்ளிகள்:

  • பள்ளிகளின் மொத்தப் பதிவு விகிதத்தை (Gross Enrollment Ratio) 100 சதவீதமாக்குவது.
  • பள்ளியிலிருந்து விடுபட்ட சுமார் இரண்டு கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவருதல்.
  • 10+2 என்று இப்போது இருக்கிற பள்ளிக்கல்வி முறையை 5+3+3+4 என்று மாற்றுவது.
  • அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவிற்கு முக்கியத்துவம் தரப்படும்.
  • தாய்மொழியில் கல்வி.
  • கல்லூரி கல்வியின் மொத்தப் பதிவு விகிதத்தை 50 சதவீதமாக்குவது.
  • கிரெடிட் சிஸ்டம் கொண்டுவரப்படும். இதன் மூலம் ஒருவர் கல்லூரி மாறி மாறிக்கூடப் படித்து, பட்டம் பெறமுடியும்.
  • தேசிய ஆய்வு அறக்கட்டளை ஒன்று தொடங்கபடும்.

மாணவர்களுக்கான குறிப்பு :

  • UPSC Civil Service GS 2 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
  • UPSC Civil Service Prelims மற்றும் TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
  • கல்வி சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தி தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

-அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

உலகின் மிகப்பழமையான குகை ஓவியம்

வரலாறு காணாத வேலைவாய்ப்பின்மை!

உலக பாரம்பரியக் குழுவின் நாற்பத்து ஆறாவது அமர்வு

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts