டிரம்ப் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் முறை

Published On:

| By Minnambalam Login1

current affairs trump shot at

சனிக்கிழமை(13-07-2024) அன்று ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னால் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சுடப்பட்டார். current affairs trump shot at

பென்சில்வேனியா மாகாணத்தில் டிரம்ப் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய சில நிமிடங்களில் இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்தேறியது. ஒரு குண்டு, டிரம்ப்பின் வலது காதில் பட்டு, அவரது முகத்தில் ரத்தத்தைச் சிதறடித்தது.

பிரச்சாரம் நடந்த இடத்திற்கு அருகே இருந்த ஒரு கட்டடத்தின் மாடியிலிருந்து டிரம்ப்பைச் சுட்ட நபரை, இரகசியப் பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். current affairs trump shot at

இந்தச் சம்பவத்தைத் தீர விசாரிக்கக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையிலிருந்து அறிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எப்படி நடத்தப்படுகிறது?

  • அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நான்காண்டிற்கு ஒரு முறை, நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை அன்று நடத்தப்படும்.
  • இது ஒரு மறைமுகமான தேர்தல். அதாவது மக்கள் நேரடியாக ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதில்லை.
தேவையான தகுதிகள்:
  • தேர்தலில் நிற்க விரும்பும் நபரின் வயது முப்பத்தைந்து அல்லது அதற்கு மேலாக இருக்க வேண்டும்.
  • அமெரிக்காவில் பிறந்திருக்க வேண்டும்.
  • அமெரிக்காவில் பதினான்கு ஆண்டுகள் வசித்திருக்கவேண்டும்.
முறை:
பிரைமரி மற்றும் காக்கஸ்:
  • ஒவ்வொரு கட்சியின் உறுப்பினர்கள் கட்சியில் உள்ள தங்களுக்கு பிடித்தமான, தகுதியுள்ள வேட்பாளருக்கு வாக்களிப்பர். இதை பிரைமரி (Primary) என்று அழைப்பார்கள். 34 மாகாணங்கள் பிரைமரி முறையைப் பின்பற்றுகிறது.
  • அல்லது, கட்சி உறுப்பினர்கள் குழுவாகக் கூடி, விவாதித்த பின்பு, வேட்பாளரை வாக்களித்துத் தேர்ந்தெடுப்பார்கள். இதை காக்கஸ் என்று அழைப்பார்கள். பதினாறு மாகாணங்கள் காக்கஸ் முறையைப் பின்பற்றுகிறது.
கட்சிகளின் தேசிய மாநாடுகள்:
  • இந்த இரண்டாம் கட்டத்தில் ஒவ்வொரு கட்சியும் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் தங்களது கட்சியின் வேட்பாளரை பொது மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
  • மேலும், ஒவ்வொரு வேட்பாளரும், துணை ஜானதிபதி பதவிக்கான வேட்பாளரை இந்தக் கட்டத்தில் அறிவிப்பார்.
பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம்:
  • ஒவ்வொரு கட்சியிலிருந்தும் ஒரு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கும்.
  • இதில் ஒவ்வொரு வேட்பாளரும், நாடுமுழுக்க பயணம் செய்து, நாட்டிற்கான தங்களுடைய திட்டங்களைப் பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களது ஆதரவைப் பெற முயல்வர்.
தேர்தல் தினம்:
  • நவம்பர் முதல் செவ்வாய்க்கிழமை அன்று மக்கள் வாக்களிப்பார்கள்.
  • இதில் சுவாரசியமான ஒரு விஷயம் என்னவென்றால், மக்கள் நேரடியாக ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
  • அவர்கள் “எலக்டோரல் காலேஜ்”(Electoral College) எனப்படும் ஒரு குழுவின் நபர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள்.
  • இந்த எலக்டொரல் காலேஜ் 538 உறுப்பினர்களை கொண்டது. இவர்களை ‘எலக்டர்ஸ்’(Electors) என்று அழைப்பார்கள். இவர்கள், மக்கள் ஆதரவளித்துள்ள வேட்பாளர்களுக்குத் தங்கள் வாக்குகளை அளிப்பார்கள் என்று உறுதிமொழி ஒன்றை முன்பே அளித்திருப்பார்கள்.
  • ஒருவர் ஜனாதிபதி ஆவதற்கு, குறைந்தபட்சம் 270 எலக்டர்ஸின் வாக்குகள் தேவை.

மாணவர்களுக்கான குறிப்பு :

  • UPSC Civil Service GS 2 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
  • UPSC Civil Service Prelims மற்றும் TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
  • சர்வதேச அரசியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தி தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

-அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

சீன எல்லையில் உள்ள கிராமங்களுக்கு 4G!

அசைவ உணவுகளை தடைசெய்த உலகின் முதல் நகரம்!

மணிப்பூர் குறித்து மௌனம் கலைத்த பிரதமர் மோடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share