வயிற்றுப் போக்கைத் தடுத்து நிறுத்த தேசிய அளவிலான இயக்கம்.

Published On:

| By Minnambalam Login1

stop diarrhoea campaign

மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை, மத்திய சுகாதார அமைச்சகத்தின் “ஸ்டாப் டயரியா” (STOP Diarrhoea) இயக்கத்துடன் இனணந்துள்ளது. current affairs tamil STOP Diarrhoea

இந்த இயக்கம் கடந்த ஜூன் மாதம், இருபத்து நான்காம் தேதி, மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டாவால் அறிவிக்கப்பட்டது. current affairs tamil STOP Diarrhoea

டயரியா(Diarrhoea) என்றால் வயிற்றுப் போக்கு. வயிற்றுப்போக்கால் நிகழும் குழந்தை மரணங்களை தடுப்பதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம்.

ஐந்து வயதுக்குட்பட்டக் குழந்தைகளுக்கு ஓஆர்எஸ்(ORS) கரைசல் மற்றும் ஸிங்க் மாத்திரைகள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படவிருக்கிறது. இந்த இயக்கத்தின் கால அளவு, இரண்டு மாதங்களாகும்.

பின்னணி:

  • 2014 ஆம் ஆண்டு வயிற்றுப்போக்கைத் தடுப்பதற்கு இரண்டு வாரக்கால திட்டம் ஒன்று, அன்றைய மத்திய சுகாதார அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
  • இந்த திட்டம் தான் இப்பொழுது பெயர் மாற்றப்பட்டு, இரண்டு மாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய செயல்திட்டம்:

  • ஜுலை ஒன்று முதல் ஆகஸ்ட்டு முப்பத்து ஒன்று வரை இத்திட்டம் செயல்படும்.
  • ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு ஓஆர்எஸ் பவுடர் மற்றும் ஸிங்க் மாத்திரைகள் வழங்கப்படும்.
  • ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி போன்ற இடங்களில் ஓஆர்எஸ்-ஸிங்க் நிலையங்கள் அமைக்கப்படும்.
  • மக்களிடையே வயிற்றுப்போக்கைத் தவிற்பது மற்றும் நிறுத்துவது பற்றியான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

முக்கிய செயல்பாடுகள்:

  1. சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்துதல்.
  2. சுத்தமான தண்ணீர்க்கு ஏற்பாடு செய்தல்.
  3. துப்புரவில் கவனம் செலுத்துதல்.
  4. சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டுசெல்லுதல்.

இதன் மூலம் குழந்தை மரணங்களை தடுப்பதும், பொது சுகாதாரத்தின் தரத்தை மேம்படுத்துவதும்தான் அரசாங்கத்தின் அடிப்படை குறிக்கோல்.

மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறையின் செயல்திட்டம்:

  1. சமூக ஈடுபாடு: கிராமங்களில் உள்ள துப்புரவு மற்றும் குடிநீர் குழுக்களின் மூலமாக அந்தந்த ஊர் மக்களை இந்த இயக்கத்தில் பங்குபெறச் செய்தல்.
  2. தண்ணீரின் தரத்தை அடிக்கடி பரிசோதித்து, முடிவுகளை பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி போன்ற இடங்களில் மக்கள் பார்வைக்கு வைப்பது.
  3. பொதுமக்கள், அரசதிகாரிகளுக்கு நீர் மேலாண்மை, சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை பற்றி பயிற்சி அளிப்பது.
  4. நீர் குழாய்களை பழுதுபார்ப்பது.
  5. பொது மக்களிடம் விழிப்புனர்வு ஏற்படுத்துவது.
  6. முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவது.
  7. இளம் தாய்கள் மற்றும் பதின் பருவ பெண்களிடம் சுகாதாரம், துப்புரவு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது.

இரண்டு மாதத்திற்கான இத்திட்டம், நான்காக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவும் இரண்டுவாரக்காலத்திற்கு செயல்படும்.

மாணவர்களுக்கான குறிப்பு :

  • UPSC Civil Service GS 2 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
  • UPSC Civil Service Prelims மற்றும் TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
  • அரசாங்கத் திட்டங்கள் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தி தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

-அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

யுனெஸ்கோ பட்டியலில் கோழிக்கோடு மற்றும் குவாலியர் நகரங்கள்!

அஸ்தானாவில் நடக்கும் ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாடு!!!

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment