இரண்டாயிரத்துப் பதினைந்தாம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கப்பட்ட ஒன்றிய அரசாங்கத்தின் ஸ்மார்ட் சிட்டி இயக்கம் (Smart City Mission) மார்ச் முப்பத்து ஒன்றாம் தேதி, இரண்டாயிரத்து இருபத்து ஐந்தாம் வருடம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. current affairs tamil smartcity mission
- இவ்வியக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து பல புதுமையான விஷயங்களைச் செய்து வருகிறது.
- அவை, இந்தியாவில் இருக்கும் நகரங்களுக்கு இடையே போட்டிகள் நடத்தி, அதில் நூறு நகரங்களைத் தேர்வு செய்தது, திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது, அத்திட்டங்களைச் செயல்படுத்த “ஸ்பெஷல் பர்பஸ் வெஹிகிள்”( Special Purpose Vehicle) என்ற குழு அமைத்தது போன்றவை.current affairs tamil smartcity mission
- இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு நகரங்கள்,ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, எட்டாயிரத்திற்கும் அதிகமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
தற்போதைய நிலை:
- இரண்டாயிரத்து இருபத்து நான்காம் வருடம் ஜூலை மூன்றாம் தேதியின் நிலவரப்படி,ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரத்து இருநூற்று முப்பத்து ஏழு கோடி(₹ 1,44,237 கோடி) மதிப்புள்ள, ஏழாயிரத்து நூற்று எண்பத்து எட்டு (7188) திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.
- மிச்சமுள்ள எண்ணூற்று முப்பது திட்டங்கள் முடிக்கும் தறுவாயில் உள்ளன.
- ஒன்றிய அரசாங்கம் இந்த ஸ்மார்ட் சிட்டி இயக்கத்திற்கு நாற்பத்து எட்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது. இதிலிருந்து தொண்ணூற்று ஏழு சதவீதப் பணத்தை தேர்தெடுக்கபட்ட நூறு நகரங்களுக்கு வினியோகித்துள்ளன. இந்த விநியோகிக்கப்பட்டப் பணத்தில், தொண்ணூற்று மூன்று சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- எழுபத்து நான்கு நகரங்களுக்கு ஒன்றிய அரசாங்கம் தனது பங்கை முழுமையாக வழங்கி முடித்துள்ளது.
- கடந்த சில மாதங்களாக, மிச்சமுள்ள பத்து சதவீதத் திட்டங்களை முடிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரிப் பல மாநிலங்களிடமிருந்து ஒன்றிய அரசாங்கத்திற்கு விண்ணப்பங்கள் வந்துகொண்டிருந்தன.
- அதையேற்ற ஒன்றிய அரசாங்கம், மார்ச் முப்பத்து ஒன்றாம் தேதி, இரண்டாயிரத்து ஐந்தாம் தேதிவரை இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நீட்டித்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி இயக்கத்தின் தேவை:
- இந்தியாவின் முப்பத்து ஒரு சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கிறார்கள். அறுபத்து மூன்று சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு இவர்கள்தான் காரணம். இது இரண்டாயிரத்து முப்பதில் எழுபத்தைந்து சதவீதமாக மாறும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
- அதனால் நம்முடைய நகரங்களை மேம்படுத்துவது முக்கியத்துவம் பெற்றது.இதன் விளைவாகத்தான் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இலக்கு:
- நகர வாழ் மக்களின் அடிப்படை உள்கட்டமைப்பு தேவைகளைப் பூர்த்தி செய்வது.
- தரமான வாழ்க்கை தரத்திற்கு வழிவகுப்பது.
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி.
நிதி:
- இந்தத் திட்டங்களுக்குத் தேவையான மொத்தப் பணத்தில், 45 சதவீதத்தை ஒன்றிய அரசாங்கம் மற்றும் அந்தந்த மாநில அரசாங்கங்கள் வழங்கும். மிச்சப் பணத்தைத் தனியார் பங்களிப்பின் மூலம் ஈட்டிக்கொள்ளவேண்டும்.
மாணவர்களுக்கான குறிப்பு:
- UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
- UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group 2 மற்றும் Group 1 Prelimsக்கு உதவும்.
- பொருளாதார வளர்ச்சி சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
-அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அஸ்தானாவில் நடக்கும் ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாடு!!!
போலியோ தடுப்பில், உலக சுகாதார அமைப்பு.
ஏழாவது அட்டவணையின் முக்கியத்துவம்!!!
+1
+1
+1
+1
+1
+1
+1