current affairs tamil puri jagannath

46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பொக்கிஷ அறை!

போட்டித்தேர்வுகள்

12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புரி ஜெகந்நாதர் கோயிலின் கருவூலமான ரத்னா பந்தர் எனப்படும் பொக்கிஷ அறை 46 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டது.பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய பொக்கிஷ அறையில் என்னதான் உள்ளது என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.current affairs tamil puri jagannath

ரத்னா பந்தர் எனப்படும் பொக்கிஷ அறை:current affairs tamil puri jagannath

  • இந்த கோயிலின் மூலவராக கிருஷ்ணர் சுபத்ரா பலராமன் உள்ளனர். இப்புராதனக் கோயிலில் தரைப்பகுதிக்கு அடியில் பொக்கிஷ அறை உள்ளது.
  • இதில் 128.38 கிலோ தங்கம், 221.53 கிலோ வெள்ளி ஆபரணங்கள் மற்றும் விலையுயர்ந்த ரத்னங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
  • இந்த ஆபரணங்கள் ஜெகந்நாதரின் ரத யாத்திரை போன்ற விசேஷ நாட்களில் சிலைகளை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டு வந்தது.
  • ஆனால் கடந்த 46 ஆண்டுகளாக பொக்கிஷ அறை திறக்கப்படவில்லை.
  • கடைசியாக 1978 ஆம் ஆண்டு மே 13 முதல் ஜூலை 13 ஆம் தேதி வரை ரத்னா பந்தர் எனப்படும் பொக்கிஷ அறை திறக்கப்பட்டது.
  • இதனிடையே 1985 இல் பொக்கிஷ அறையை தொல்லியல் துறை குழு ஆய்வு செய்ய சென்ற போது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கூறி திரும்பிவிட்டது.
  • இந்த நிலையில்தான் ஒடிசாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பொக்கிஷ அறையை திறக்க அனுமதி அளித்து ஞாயிற்றுக்கிழமை (14.07.2024) திறக்கப்பட்டது.
  • இங்குள்ள ஆபரணங்களை கணக்கிட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் ராத் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
  • இது குறித்து ஜெகந்நாதர் கோயில் நிர்வாகத் தலைவர் அரபிந்தா பதீ கூறுகையில்,
  • ரத்னா பந்தர் கணக்கீட்டுப் பணி முழுவதும் பதிவு செய்யப்படும் என்றும், அவை ரகசியமாக வைக்கப்படும் எனவும் கூறினார்.
  • மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் பிரதிநிதி முன்னிலையில் பொக்கிஷ அறையில் உள்ள பொருட்களைக் கணக்கிடும் பணிகள் நடைபெறும் என்றும்,
  • தற்போது பொக்கிஷ அறை திறக்கப்பட்டாலும் அரசிடம் இருந்து அனுமதி பெற்ற பிறகு கணக்கீடு பணிகள் நடைபெறும் என தெரிவித்தனர்.
  • மேலும் அதிகாரிகள் இதற்கான பணிகளை முடிக்க சுமார் 70 நாட்கள் வரை ஆகலாம் எனக் கூறினர்.

மாணவர்களுக்கான குறிப்பு:

1. UPSC Civil Service GS-1 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. கலாச்சாரம் தொடர்பான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

-பூஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

அசைவ உணவுகளை தடைசெய்த உலகின் முதல் நகரம்!

உணவுப் பணவீக்கம் 9.36% ஆக உயர்ந்துள்ளது

மணிப்பூர் குறித்து மௌனம் கலைத்த பிரதமர் மோடி

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *