பிரதமர் நரேந்திர மோடி திங்கள்(08.07.24) அன்று மாஸ்கோ சென்றடைந்து, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்திக்கவிருக்கிறார். current affairs tamil pm russia
உக்ரைன் போர் ஆரம்பித்தபிறகு இவ்விருவரும் சந்தித்துக்கொள்வது இதுவே முதல்முறை.
மோடியை, புதின் தனது ‘டச்சாவில்’ (கிராமத்து வீடு) சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார் எனவும், இந்தமாதிரி சந்திப்பை அவர் வெகு சில முக்கிய தலைவர்களுக்கே வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பில் மோடி வியாபாரம் மற்றும் வங்கி பரிவர்த்தனையில் உள்ள சவால்கள், இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி, முதலீடு வாய்ப்புகள், வடக்கு-தெற்கு போக்குவரத்து பாதை( North-South Transport Corridor), சென்னை-விளாதிவொஸ்தோக் கடற்புறப் பாதை (Chennai-Vladivostok Maritime Corridor) மற்றும் வடக்கு கடல் (North Sea) போன்றவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்கள்.
மேலும், ரஷ்யாவிலிருந்து ராணுவ இறக்குமதிகளை விரைவுபடுத்த புதினிடம் கோரிக்கை வைப்பார் என்று சொல்லப்படுகிறது. current affairs tamil pm russia
இந்திய-ரஷ்யா உறவின் வரலாறு:
பல சோதனைகளைத் தாண்டிய உறவு:
- பனிப்போர்க் காலத்தில், இந்தியா மற்றும் அப்போதைய சோவியத் ஒன்றியம் மிகவும் நெருக்கமாக பயணித்தது.
- 1971 ஆம் ஆண்டு நடந்த பாகிஸ்தானுடனான போரில், ரஷ்யா இந்தியாவின் பக்கம் நின்றது. அந்த ஆண்டு, இந்தோ-சோவியத் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- அக்டோபர் மாதம் இரண்டாயிரம் ஆண்டு, இந்தியா ரஷ்யா இடையேயான ஒப்பந்தம் மூலோபாயக் கூட்டு ஒப்பந்தமாக (Strategic Partnership) மாற்றப்பட்டது.
- இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டு, மேற்குறிப்பிட்ட கூட்டு, சிறப்பு மூலோபாயக் கூட்டாக மேம்படுத்தப்பட்டது.
எரிசக்தி பாதுகாப்பு:
- உலகின் கணிசமான இயற்கை எரிவாயு (Natural Gas) வளம் ரஷ்யாவில் உள்ளது.
- நிலக்கரி பயன்பாட்டை குறைக்கதிட்டமிட்டிருக்கும் இந்தியாவிற்கு இந்த இயற்கை எரிவாயு மிக அவசியம். இந்த எரிவாயுவை இந்திய அரசு ரஷ்யாவிலிருந்து கணிசமான அளவு இறக்குமதி செய்கிறது.
- கூடங்குளம் அணுமின் நிலையம் ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியோடுதான் செயல்படுகிறது.
பொருளாதார உறவு:
- ரஷ்யா, இந்தியாவின் வர்த்தகக் கூட்டாளி பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.
- 2025 ஆண்டில், இருவருக்கும் உள்ள மூதலீட்டுறவு 5000 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு எட்டும் எனச் சொல்லப்படுகிறது.
புவிசார் அரசியல்:
- சீனாவைச் சமாளிக்க, இந்தியாவிற்கு ரஷ்ய உதவி தேவை.
- இந்தியாவும் ரஷ்யாவும் வெகுகாலமாக பலதுருவ அரசியல் மையத்தின் தேவையைப் பற்றிப் பேசிவருகிறார்கள்.
ராணுவத் தேவைகள்:
- பல காலமாக இந்தியா ரஷ்யாவிடமிருந்து ராணுவ உபகரணங்களை இறக்குமதி செய்துவருகிறது.
- பிரம்மோஸ் ஏவுகணை இந்தியா ரஷ்யாவின் கூட்டுமுயற்சியாகும்.
இன்றைய சவால்கள்:
- ரஷ்யா-மேற்குலக நாடுகள் உறவுகள் சீராக இல்லை, இதற்கிடையில் அது சீனாவுடன் மோதுவதற்குத் தயங்கலாம்.
- ரஷ்யா-சீனா ராணுவ ஒத்துழைப்பு பலப்பட்டுக்கொண்டேவருகிறது, இது இந்தியாவிற்குச் சங்கடமாக இருக்கும்.
- உக்ரைன் போரினால், மேற்குலக நாடுகள் இந்தியாவிற்கு ரஷ்யாவிடமிருந்து செய்யும் இறக்குமதிகளைக் குறைக்க அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
மாணவர்களுக்கான குறிப்பு :
- UPSC Civil Service GS 2 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
- UPSC Civil Service Prelims மற்றும் TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
- பன்னாட்டு உறவுகள் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தி தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
-அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
நிலக்கரித்துறை 10.2% சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்
யார் இந்த கெய்ர் ஸ்டார்மர் !!!