நேட்டோ குழுமம் அதன் அடுத்த தலைவராக நெதர்லாந்தின் வெளியேறும் பிரதமரான மார்க் ரித்தவை(Mark Rutte) தேர்வு செய்துள்ளது. current affairs in tamil nato mark rutte
நேட்டோ:
- நேட்டோ குழுமம் இரண்டாம் உலகப்போருக்குப் பின் உருவாக்கப்பட்ட அரசுகளுக்கிடையேயான இராணுவக் கூட்டணி ஆகும்.
- ஏப்ரல் 4, 1949 தேதி, வாஷிங்டன் ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்க மற்றும் ஐரோப்பியக் கண்டங்களைச் சேர்ந்த பன்னிரண்டு நாடுகளால் நிறுவப்பட்டது.current affairs in tamil nato mark rutte
- அவை, பெல்ஜியம், கேனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்த், இதாலி, லக்ஸம்பெர்க், நெதர்லாந்த், நார்வே, போர்ச்சுகள், யுனைடட் கிங்டம், மற்றும் யுனைடட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்க ஆகும்.
- இதன் தலைமை செயலகம் பெல்ஜியத்தின் தலைநகரம் பிரஸல்ஸ் ஆகும்
- இந்த அமைப்பு பனிப்போர் காலகட்டத்தில், சோவியத் ஒன்றியத்திற்கு எதிராகச் செயல்படுவதற்காக உருவாக்கபட்டது.
- சோவியத் ஒன்றியத்தின் சிதறலுக்கு பின், இவ்வமைப்பு பாதுகாப்பு மேலான்மை, நெருக்கடி மேலான்மை போன்றவைகளுக்கு முக்கியத்துவம் குடுக்க ஆரம்பித்தது.
- நேட்டோவில் தற்போது முப்பதிரண்டு நாடுகள் உள்ளன.
நேட்டோவின் செயல்பாடுகள்:
- அரசியல் செயல்பாடுகள்
- ஜனனாயக விழுமியங்களை பரப்புவது, பாதுகாப்பு சம்பந்தமாக பிரச்சனைகளுக்கு தீர்வு கான்பது, போர்களை தடுக்க நடவடிக்கை எடுப்பது, நாடுகளுக்கிடையேயான உறவுகளை பாதுகாப்பது.
- இராணுவ செயல்பாடுகள்
- உறுப்பின நாடுகள் தாக்கபட்டால், உதவிக்கு வருவது.
- சண்டைகளை சுமுகமாக முடித்து வைப்பது.
ஏன் இப்போது பேசப்படுகிறது:
- ரஷ்யா-உக்ரைன் போரின் விளைவால், நேட்டோ அமைப்பு செய்திகளில் அடிப்பட ஆரம்பித்தது.
- உக்ரைனுக்கு நேரடியாகவும், மறைமுகமாவும் நேட்டோ நாடுகள் உதவி வருகின்றன.
- ஃபின்லாந்த் மற்றும் ஸ்வீடன் நாடுகள் நேட்டோவில் சமீபத்தில் இணைந்துள்ளன.
- இந்த இரண்டு நாடுகள் நேட்டோவில் சேர்ந்தது, ரஷ்யா உக்ரைன் மீது போர்த் தொடுததற்கான காரணமாக சொல்லபடுகிறது.
- இவை ரஷ்யாவிற்கு மிக அருகில் உள்ள நாடுகள் என்பது குறிப்பிடதக்கது.
- உக்ரைன் நேட்டோவின் உறுப்பினராவதற்கு முயற்ச்சி செய்துவருகிறது.
- நேட்டோவின் இப்போதைய தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஆவார்.
மாணவர்களுக்கான குறிப்பு:
- UPSC Civil Service GS-2 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
- UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group 2 மற்றும் Group 1 Prelimsக்கு உதவும்.
*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
-அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிரேட் நிகோபார் திட்டம் : பாதிப்பிற்கு உள்ளாகும் 2 முக்கிய உயிரினங்கள்!
கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல்!
உங்கள் சேமிப்பை வைப்பு காப்பீடு காப்பாற்றுமா?
+1
+1
+1
+1
1
+1
+1
+1