கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன், நிபா வைரஸ் தொற்றின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அன்று மரணமடைந்தார். current affairs tamil nipah
இந்தச் சம்பவத்தால், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இரு பஞ்சாயத்துகளில் நிபா நோய்ப் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. current affairs tamil nipah
நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறுவன் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எனவும், அவர் மரணமடைந்ததற்கு, வைரஸ் தொற்றால் ஏற்பட்ட மாரடைப்புதான் காரணம் என்று கேரளச் சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.
அந்தச் சிறுவனின் மூன்று சொந்தக்காரர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த நான்கு நபர்கள் மலப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள் என்று வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
மேலும், மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்று வீணா ஜார்ஜ் கேட்டுக்கொண்டார்.
மலப்புரம் ஆட்சியாளர் வி.ஆர்.வினோத் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தார்.
இதற்கு முன் 2018ஆம் ஆண்டு பரவிய நிபா வைரஸ் தொற்று காரணமாக மாமல்லபுரம் மற்றும் கோழிக்கோட்டில் 17 உயிர்களைப் பலிவாங்கியது குறிப்பிடத்தக்கது.
நிபா வைரஸ்:
- இந்த வைரஸ், விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது.
- 1999 வருடம் , சுங்காய் நிபா என்ற மலேசியக் கிராமத்தைச் சேர்ந்த பன்றி பண்ணையில் இந்த வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்டது. அதனால் தான் இந்த வைரஸிற்கு ‘நிபா’ என்ற பெயர் வைக்கப்பட்டது.
எப்படிப் பரவுகிறது?
- பழம் தின்னும் வௌவால்களின் மூலமாகத்தான் இந்த நோய் பரவலாகப் பரவுகிறது. நிபா வைரஸ் இந்த வௌவால்களின் சிறுநீர், மலம், எச்சில் போன்றவற்றில் இருக்கும்.
நோய்த் தொற்றின் அறிகுறிகள்:
- தலைவலி, மயக்கம், குழப்பமாக உணர்வது.
இந்த நோய்க்குத் தற்போது எந்தத் தடுப்பு மருந்தும் இல்லை. பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிரச் சிகிச்சை அளிப்பதுதான் ஒரே வழி.
மாணவர்களுக்கான குறிப்பு :
- UPSC Civil Service Prelims மற்றும் TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
- பொதுச்சுகாதாரம் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தி தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
டிரம்ப் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் முறை
கடும் வெப்பத்தால் பாதிப்பிற்குள்ளாகும் பெண்கள்!