current affairs tamil indianbudget

புதிய வருமான வரி அடுக்குகளில் திருத்தம்!

போட்டித்தேர்வுகள்

நாடாளுமன்றத்தில் 24-7-2024 நடந்த பட்ஜெட் அமர்வில், புதிய வருமானவரி (New Regime) அடுக்குகளில் செய்யப்பட்ட திருத்தங்களை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். current affairs tamil indianbudget

வருமான வரி விதிக்கப்படும்₹ 3-6 லட்சம் என்ற முதல் அடுக்கு ₹3-7 லட்சமாகத் திருத்தப்பட்டுள்ளது. ஆனால் வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, அதே 5% தான். current affairs tamil indianbudget

₹0-3 லட்சம் அடுக்கு, ₹12-15 லட்சம் அடுக்கு மற்றும் ₹15 லட்சத்தை மீறும் வருமானங்களின் மீது விதிக்கப்படும் வரிகளில் எந்தவித மாற்றமும் இல்லை. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திருத்தங்களால், மக்கள் ₹17500 வரை சேமிக்கமுடியும் என்று ஒன்றிய நிதி அமைச்சர் தெரிவித்தார்.

சம்பளம் வாங்கும் நபர்களுக்கு அளிக்கப்படும் ₹ 50,000 நிலையான விலக்கு (Standard Deduction) ₹75,000 ஆகவும், குடும்ப ஓய்வூதியம் (Family Pension) வாங்கும் நபர்களுக்கு அளிக்கப்படும் ₹15,000 நிலையான விலக்கு ₹25,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் ₹20 லட்சம் வரை வெளிநாடுகளில் வைத்திருக்கும் அசையும் சொத்துகளின் விவரங்களை அரசாங்கத்திடம் தெரிவிக்காததற்கு அபராதம் ஏதும் விதிக்கப்படாது என்று நிதி அமைச்சர் கூறினார்.

பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், அந்தந்த நிறுவனங்கள் வழங்கும் ஊழியர்களுக்கான பங்கு முதலீட்டுத் திட்டங்களின் மூலம் வெளிநாடுகளில் முதலீடு செய்வது வழக்கமாகியுள்ளது.

இந்த முதலீடுகளின் விவரங்களை அரசாங்கத்திடம் அறிவிக்காவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இதைச் சரிசெய்ய இந்த₹20 லட்சம் வரையறை உதவும் என்று நிதி அமைச்சர் விளக்கினார்.

திருத்தப்பட்ட புதிய வருமான வரி அடுக்குகள் மற்றும் வரி விகிதங்கள்:

₹0-3 லட்சம் – 0% வரி

₹3-7 லட்சம் – 5% வரி

₹7-10 லட்சம் – 10% வரி

₹10-12 லட்சம் – 15% வரி

₹ 15 லட்சத்திற்கும் மேல் – 30% வரி

நடைமுறையில் இருக்கும்  வருமான வரி அடுக்குகள் மற்றும் வரி விகிதங்கள்:

₹0-3 லட்சம் – 0% வரி

₹3-6 லட்சம் – 5% வரி

₹6-9 லட்சம் – 10% வரி

₹9-12 லட்சம் – 15% வரி

₹12-15 லட்சம் – 20% வரி

₹ 15 லட்சத்திற்கும் மேல் – 30% வரி

மாணவர்களுக்கான குறிப்பு :

  • UPSC Civil Service GS 3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
  • UPSC Civil Service Prelims மற்றும் TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
  • நிதிநிலை சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தி தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

டிரம்ப் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் முறை

காவிரி நதி நீர் விவகாரத்திற்கு ஸ்டாலின் கண்டனம்!

சீன எல்லையில் உள்ள கிராமங்களுக்கு 4G!

+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *