பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் முதல்வர் அமைச்சர்கள் காமராஜருக்கு மரியாதை செலுத்தினர். பள்ளிகளில் காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. current affairs tamil kamarajar
கல்வி வளர்ச்சி நாள்:
- 2006 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் நாளினை “கல்வி வளர்ச்சி நாளாக” அறிவித்தார்.
- அதன்படி காமராஜரின் பிறந்த நாளானது தமிழ்நாடு அரசின் சார்பில் கல்வி வளர்ச்சி நாளாகத் தொடர்ந்து சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிறப்பு: current affairs tamil kamarajar
- இவர் விருதுநகர் மாவட்டத்தில் ஜூலை மாதம் 15-ம் தேதி 1903-ம் ஆண்டு பிறந்தார். இவரின் பெற்றோர் பெயர் குமாரசாமி நாடார் சிவகாமி அம்மையார் ஆவார்.
முதலமைச்சர் காமராஜர்:
- காமராஜரின் அரசியல் குரு சத்தியமூர்த்தி என்பவராவார். அவரது சொற்பொழிவையும் மேடைப்பேச்சையும் கேட்டு வளர்ந்தார்.
- காமராஜரை காங்கிரஸ் கட்சியின் செயலாளராக சத்தியமூர்த்தி நியமித்தார்.ராஜாஜி அவர்கள் அரசியலில் இருந்த சிக்கல்கள் காரணமாக தனது முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
- அப்போது சட்டசபையில் சுப்பிரமணியன் என்பவரை எதிர்த்து காமராஜர் கட்சி தேர்தலில் போட்டியிட்டார். வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக 1953-ம் ஆண்டு பொறுப்பேற்றார்.
கல்விப்பனி:
- காமராஜர் முதலமைச்சராக பதவியேற்றவுடன் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று மதிய உணவு திட்டத்தையும் இலவச கல்வி சீருடை திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தினார்.
- மூடி இருந்த 6000 பள்ளிகளையும் 17,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளையும் திறந்து வைத்தார். இதனால் தான் இவரை எல்லோரும் அன்பாக கல்வி கண் திறந்தவர் காமராஜர் என்று அழைக்கின்றனர்.
தேசிய தலைவர்:
- இவர் தமிழகத்தின் முதலமைச்சராக மூன்று முறை பதவியில் இருந்த பெருமைக்குரியவர். இவர் நினைத்திருந்தால் இன்னும் பல முறை கூட முதலமைச்சராக இருந்திருக்கலாம்.
- ஆனால் அவர் நாட்டின் வளர்ச்சி இளைஞர்களிடம் உள்ளது என்பதை உணர்ந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அதே ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்றார்.
மறைவு:
- எளிமையான தோற்றத்தையும் வாழ்க்கையையும் வாழ்ந்த தியாக செம்மல் கர்மவீரர் காமராஜர் அவர்கள் அக்டோபர் மாதம் 2-ம் தேதி 1975-ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.
மாணவர்களுக்கான குறிப்பு:
1. UPSC Civil Service GS-1 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. வரலாறு சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
-பூஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அசைவ உணவுகளை தடைசெய்த உலகின் முதல் நகரம்!
டிரம்ப் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் முறை
உணவுப் பணவீக்கம் 9.36% ஆக உயர்ந்துள்ளது