ஒலிம்பிக்சில் இந்தியா indian dogs in olympics
- பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு, பாதுகாப்பு வழங்குவதற்காக, பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் மோப்பம் பிடித்தல் மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொள்வதற்காக பத்து சிறப்பு பயிற்சி பெற்ற இந்திய CRPF மற்றும் சிறப்பு கமாண்டோ படை நாய்கள் பிரான்சுக்கு (malinoise – Belgian shepherd)அனுப்பப்பட்டுள்ளன.indian dogs in olympics
- இந்த வகை நாய்கள், பெல்ஜிய மாலினோயிஸ் வளர்ப்பு நாய்கள், அவற்றின் போர் திறன்களுக்கு பெயர் பெற்றவை, குண்டுகள் மற்றும் பிரச்சனைகளை ஏற்படுத்துபவர்களைக் கண்டறிவதற்கு உதவும்.
- 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள, அபோதாபாத் நகரில், ஒசாமா பின்லேடனின் மறைவிடத்தை, மோப்பம் பிடிக்க அமெரிக்க சிறப்புப் படைகளுக்கு, அந்த வகை நாய் உதவியதாகத் தெரிவிக்கப்பட்டது.
- பரந்த மூக்கு மற்றும் பெரிய தலை கொண்ட இந்த நாய் , சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் IED களை துல்லியமாக கண்டறிய முடியும், மேலும் இந்த சமிக்ஞைகளை, குரைத்து இலக்கை எச்சரிக்காமல், தலையை அசைப்பதன் மூலம் தெரிவிக்கும் அறிவாற்றல் கொண்டது.
- இந்த பத்து நாய்களை கையாளுபவர்கள், ஒலிம்பிக் பணிக்காக பிரஞ்சு மொழியின் அடிப்படைகளை கற்றுவருகின்றனர் .
- கர்நாடகா, பெங்களூரு அருகே உள்ள தாராலுவில் அமைந்துள்ள CRPF நாய் வளர்ப்பு மற்றும் பயிற்சி பள்ளியில் நடத்தப்பட்ட கடுமையான சோதனைக்குப் பிறகு இந்த பணிக்கு அவைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- சர்வதேச ஊடக அறிக்கைகளின் படி, ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரான்ஸ் ஒவ்வொரு நாளும் சுமார் 30,000 காவல்துறை அதிகாரிகளை ஈடுபடுத்துகிறது.
- 140 அதிகாரிகளைத் தவிர 117 தடகள வீரர்கள் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதிப்படுத்துவார்கள்.
மாணவர்களுக்கான குறிப்பு :
UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
UPSC Civil Service Prelims மற்றும் TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
சமூக சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
இந்த செய்தி தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கா
-வர்ஷா செல்வச்சந்திரன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
விழிஞ்சம் துறைமுகத்திற்கு வந்த விருந்தாளி !
போருக்கான தீர்வு, போர்க்களத்தில் இல்லை
தேசியச் சராசரியைவிடத் தமிழ்நாடு முன்னிலை!
+1
+1
+1
+1
+1
+1
+1