வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் உடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையே விவசாயம் சட்டம் மருந்து உள்பட பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. current affairs tamil vietnam
- இந்தியா வந்துள்ள வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று (01/08/2024) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு,
- இரு தலைவர்களும் வியட்நாமில் உள்ள தொலைத்தொடர்பு பல்கலைக்கழகத்தில் ராணுவ மென்பொருள் பூங்காவை திறந்து வைத்தனர்.
- இது இந்தியா மற்றும் வியட்நாம் இடையேயான கூட்டுத் திட்டமாகும். இந்த திட்டத்திற்காக இந்தியா ஐந்து மில்லியன் டாலர்களை மானிய உதவியாக வழங்கியுள்ளது.
- இதனையடுத்து சுங்க திறன் மேம்பாடு விவசாய ஆராய்ச்சி கல்வி கடல்சார் பாரம்பரியம் மருத்துவ ஆலை மற்றும் சட்டத் துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் மோடியின் உரை: current affairs tamil vietnam
- பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் இந்தியா – வியட்நாம் உறவு விரிவடைந்து ஆழமடைந்துள்ளது.
- கடந்த 10 ஆண்டுகளில் உறவுகளுக்கு விரிவான கூட்டாண்மை வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இருதரப்பு வர்த்தகம் 85 சதவீதம் உயர்ந்துள்ளது.
- இரு நாட்டு மக்களையும் ஆன்மீக மட்டத்தில் இணைத்துள்ள பௌத்தம் நமது பகிரப்பட்ட பாரம்பரியமாக உள்ளது. இந்தியாவில் உள்ள புத்த ஆன்மிக தளங்களைத் தரிசிக்க வியட்நாம் மக்களை அழைக்கிறேன்.
- வியட்நாம் இளைஞர்களும் நாளந்தா பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.
- இந்தியாவின் கிழக்கு கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் பார்வையில், வியட்நாம் இந்தியாவின் முக்கியமான பங்காளியாக உள்ளது.
- இலவச திறந்த விதிகள் அடிப்படையிலான மற்றும் வளமான இந்தோ-பசிபிக்கிற்கான இந்தியா-வியட்நாம் ஒத்துழைப்பு தொடரும்.
- இன்றைய கலந்துரையாடலில், பரஸ்பர ஒத்துழைப்பின் அனைத்து பகுதிகள் குறித்தும் இருவரும் விரிவாக விவாதித்தோம். எதிர்காலத்திற்கான திட்டங்களைத் தயாரிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
- வளர்ச்சி அடைந்த இந்தியா 2047 தொலைநோக்கு மற்றும் வியட்நாமின் 2045 தொலைநோக்கு ஆகியவை காரணமாக இரு நாடுகளிலும் வளர்ச்சி வேகம் பெற்றுள்ளது.
- பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்புக்காக புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 300 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தம் வியட்நாமின் கடல் பாதுகாப்பை பலப்படுத்தும்.
- பயங்கரவாதம் மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்று இரு தரப்பும் முடிவு செய்துள்ளது என குறிப்பிட்டார்.
மாணவர்களுக்கான குறிப்பு:
1. UPSC Civil Service GS-2 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. சர்வதேச உறவுகள் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
-பூஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஆசியாவிலேயே முதன்முறை… வியக்க வைக்கும் சென்னை
இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பால் பெருவெள்ளம் !
பெயர் மாற்றப்பட்ட ராஷ்டிரபதி பவனின் அறைகள்!