Hosur airport issue

ஓசூரில் விமான நிலையம், எளிதான காரியம் அல்ல!

போட்டித்தேர்வுகள்

ஓசூரில் விமான நிலையம் Hosur airport issue

  • கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அதிகரித்து வரும் தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்யவும், இரு பகுதிகளின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யவும் தமிழக அரசு ஓசூர் நகரில், சர்வதேச விமான நிலையம் அமைக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.Hosur airport issue
  • “மோட்டார் வாகனங்கள், துணை பொருட்கள், தோல் பொருட்கள் மற்றும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது . தொழில் வளர்ச்சிக்கான மாநிலங்களின் தரவரிசையில் 2020ஆம் ஆண்டு, கீழ்நிலையில் இருந்த தமிழகம் தற்போது ,” என்று கூறிய அவர், 2030க்குள் மாநிலத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • மாநிலங்களவையில் பேசிய முதலமைச்சர் , ஓசூர், கிருஷ்ணகிரியில் உள்ள விமான நிலையம், 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு, ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும் என்றார்.
  • இருப்பினும், முதலமைச்சரின் விமான நிலையம் அமைக்கும் கனவு எளிதான காரியம் அல்ல, ஏனெனில் 2004 ஆம் ஆண்டு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் பெங்களூர் சர்வதேச விமான நிலைய லிமிடெட் (BIAL) இடையே கையெழுத்தான அந்த ஒப்பந்தம் இந்த பகுதிக்குட்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் மீது BIALலின் பிரத்தேகமன உரிமைகளை வழங்குகிறது.
  • ஒப்பந்தம் கூறுவது” புதிய அல்லது ஏற்கனவே உள்ள விமான நிலையங்கள், (மைசூரு மற்றும் ஹாசன் விமான நிலையங்களைத் தவிர)150 கிலோமீட்டருக்கு உட்பட்ட உள்நாட்டு விமான நிலையம், இருபத்தைந்து ஆண்டு நிறைவுபெறும்வரை, அந்த விமான நிலையத்தை மேம்படுத்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் லிமிடெட் (BIAL)
    அனுமதிக்காது.முன்மொழியப்பட்ட ஓசூர் விமான நிலையம் இந்த தடைசெய்யப்பட்ட சுற்றளவிற்குள் வருகிறது வணிக நடவடிக்கைகளுக்கு BIAL இடமிருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) தேவைப்படுகிறது.”
  • மாணவர்களுக்கான குறிப்பு:
    1. UPSC Civil Service GS-1தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
    2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
    3. அரசியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

-வர்ஷா செல்வச்சந்திரன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டம்

ஏழாவது அட்டவணையின் முக்கியத்துவம்!!!

தமிழ்நாட்டில் நிதி நெருக்கடி

 

+1
1
+1
0
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0