திரிபுராவில் தீ போல் பரவும் எச்.ஐ.வி
திரிபுராவில் பரவும் எச்.ஐ.விHIV in tripura
- திரிபுரா வடகிழக்கு இந்தியாவில், அசாம் அருகில் உள்ள ஒரு மாநிலம் ஆகும் .HIV in tripura
- திரிபுரா மாநிலம் தனது மாணவர்களிடையே HIV பேரழிவை எதிர்கொள்கிறது.
- பெருமளவில் போதை ஊசி பயன்படுத்தப்பட்டதே இதற்கு காரணம் என்று அரசு அதிகாரிகள் தெருவிக்கின்றனர், மேலும்,828 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது மற்றும் 47 பேர் இந்த பெருவாரியாகப் பரவும் தொற்று நோயால் உயிர் இழந்துள்ளனர்.
- 220 பள்ளிகள்,24 கல்லூரிகளிலும் மற்றும் திரிபுரா பல்கலைக்கழகத்தில் இந்த நெருக்கடியான சூழல் நிலவிவருகிறது.
- மாணவர்களிடையே ஊசி மூலம் போதைப்பொருள் கையாண்டதே இந்த தொற்றுக்கு காரணம் .
- TSACS (Tripura State AIDS Control society) அதிகாரிகள் தினசரி ஐந்து முதல் ஏழு புதிய தொற்று உறுதி செய்வதாக அறிவித்துள்ளனர்.
- மாநிலம் முழுவதிலும் உள்ள 164 சுகாதார நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் படி , பரவலின், புவியியல் மற்றும் மக்கள்தொகை பற்றிய முக்கியமான தகவல்களை வழங்கியுள்ளது.
- தரவுகளின் படி அரசு பணியில் பணிபுரியும் , பெற்றோரின் பிள்ளைகளே இந்த நோயில் பெரும்பாலும் பாதிக்கப் பட்டவர்களாக இறுகிறார்கள்.
- மே 2024 நிலவரப்படி, திரிபுராவின் ART (ஆன்டிரெட்ரோவைரல் தெரபி) மையங்களில் தொற்றுள்ள 8,729 நபர்கள் பதிவு செய்துள்ளனர்.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ பராமரிப்பு மற்றும் ஆதரவை வழங்குவதில் இந்த மையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில், தீவிர மருத்துவம் , பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சமூக ஈடுபாடு முயற்சிகள் ஆகியவை அடங்கும்.
- திரிபுராவில் உள்ள எச்.ஐ.வி தொற்று மாணவர்களிடையே ஊசி போடும் போதைப்பொருள் பயன்பாட்டை நிவர்த்தி செய்வதற்கும், எச்.ஐ.வி பரவுவதைத் தணிப்பதற்கும் விரிவான உத்திகள் , விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மருத்துவ ஆதரவை மேம்படுத்துதல் மற்றும் சமூக ஈடுபாட்டை வளர்ப்பதன் மூலம், தொற்றுநோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தி, பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
- ஏப்ரல் 2007 முதல் மே 2024 வரையிலான புள்ளிவிவரங்கள் ஒட்டுமொத்தமாக இருப்பதாக அரசாங்கம் கூறியது.
மாணவர்களுக்கான குறிப்பு:
1. UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. அறிவியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தித் தொகுதயாராகும் மாணவர்களுக்காக.ப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு
-வர்ஷா செல்வச்சந்திரன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கேரளாவில்-ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல்
கிராபெனின்-என்னும் நானோ மெட்டீரியல்
அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டம்