கிராபெனின் graphene – a nanomaterial
- அலோட்ரோபி (அல்லது) அலோட்ரோபிசம் என்பது சில வேதியியல் தனிமங்களின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு வடிவங்கள் ஆகும் (form), அதுவும் ஒரே இயற்பியல் நிலையில் இருப்பதை (physical state), அலோட்ரோப்கள் எனப்படும். graphene – a nanomaterial
- அலோட்ரோப்கள் ஒரு தனிமத்தின் (element) வெவ்வேறு கட்டமைப்பு மாற்றங்களாகும்.
- கிராபெனின்,மனித குலத்தால் அறியப்பட்ட ஒரு பன்முகத்தன்மை கொண்ட கார்போனின் ஒரு வடிவமாகும்.
- வைரம் மற்றும் கிராஃபைட் உடன் கிராபெனினும்,கார்பனின் அலோட்ரோப் ஆகும்
- இது ஒரு நானோ பொருளாகும் , அது வைரத்தை விட வலிமையானது, வெள்ளியை விட அதிகம் மின் கடத்தும் தன்மையுடையது , ரப்பரை விட அதிக மீள்தன்மை கொண்டது, அலுமினியம் விட இலகுவானது கிராபெனின்.
- அலோட்ரோபி என்ற சொல் தனிமங்களுக்கு மட்டுமே பொருந்தும் , சேர்மங்களுக்கு (compounds)அல்ல. சேர்மத்திற்கும் பயன்படுத்தப்படும் பொதுவான சொல் பாலிமார்பிசம் ஆகும்.
- அலோட்ரோபிக் வடிவங்களுக்கு இடையிலான மாற்றத்தின் அடிப்படை, மற்ற கட்டமைப்புகளை பாதிக்கும் அதே சக்திகள் அதாவது அழுத்தம், ஒளி மற்றும் வெப்பநிலை ஆகும்.
- க்ராபெனின் மருத்துவ பயன்பாடுகள்
புற்றுநோய் செல்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய முடியும். மேலும், புற்றுநோய் கட்டியில் இதை செலுத்துவதன் மூலம் புற்றுநோய் செல்கள் இறப்பதற்கு இது வழிவகுக்கும். புற்றுநோயை மேலும் வளராமல் தடுக்கலாம். - கிராபெனின், துருவை தடுக்கும், இது ஒரு சிறந்த காப்புப் பொருளாக இருக்கும்.
மற்றொரு பயன்பாடு ,இதன் மூலம் நீர் புகாத வீடுகளை (water proof) கட்டலாம்.
மாணவர்களுக்கான குறிப்பு:
1. UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. அறிவியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
-வர்ஷா செல்வச்சந்திரன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கேரளாவில்-ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல்
காங்கிரஸ் கோரிக்கையை ஏற்குமா மத்திய அரசு?
விதிகளை வகுக்க குழுவை அமைத்துள்ளார் ஓம் பிர்லா
+1
+1
+1
+1
1
+1
+1
+1