FTA

FTA ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த இந்தியா

போட்டித்தேர்வுகள்

FTA- (Free Trade Agreement)

  • பிரிட்டிஷுடன், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த இந்தியா உறுதியளித்துள்ளது .
  • FTA- (Free Trade Agreement) என்பது இரு நாடுகளுக்கும் இடையேயான ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் முதலீடு குறித்தான ஒப்பந்தம் ஆகும்.
  • சமீபத்திய தேர்தலில், மகத்தான வெற்றியைப் பெற்ற பின்னர்,காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்த மிக உயர்ந்த அதிகாரி டேவிட் லாம்மியை சந்தித்த பிறகு,
  • இந்தியாவும் இங்கிலாந்தும் பல ஆண்டுகளாக FTA பற்றி விவாதித்து வருகின்றன மற்றும் நீடித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது
  • பிரதமர் கீர் ஸ்டார்மர் வழங்கிய முன்னுரிமையைப் பாராட்டுகிறேன் எனவும், இருதரப்பு தொழில்நுட்ப பாதுகாப்பு முன்முயற்சி மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் FTAவிற்க்கு ஒப்புதல் தெரிவித்துதிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
  • லாம்மிக்கு, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் விருந்தளித்தார் , அந்த விருந்தின் பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினரும் உலகலாவிய சர்ச்சைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
  • மேலும், காலநிலை நடவடிக்கை போன்ற உலகளாவிய தொடர்புடைய பிரச்சினைகளை சமாளிக்க இந்தியா, இங்கிலாந்துடன் ஒருங்கிணைய விரும்புகிறது என்பதனையும் தெரிவித்தார் .
  • வெளிவிவகாரச் செயலாளராகப் பொறுப்பேற்ற, முதல் மாதத்திலேயே, நான் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறேன். ஏனென்றால் உலக தெற்குடனான உறவையும், அதன் முக்கியத்துவத்தையும் அவர் குறிப்பிட்டார்.
  • லாம்மி ஒரு அறிக்கையில் , இந்தியாவை “21 ஆம் நூற்றாண்டின் வளர்ந்து வரும் வல்லரசு” என்று அழைத்தார், இது உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையுடன் வேகமாக வளர்ந்து வரும் நாடு, என்று அவர் குறிப்பிட்டார் .

மாணவர்களுக்கான குறிப்பு :
UPSC Civil Service GS -3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
UPSC Civil Service Prelims மற்றும் TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
அரசியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

இந்த செய்தி தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கா

-வர்ஷா செல்வச்சந்திரன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

உத்வேகம் பெற்றது பெண்களுக்கான திட்டங்கள்!

விழிஞ்சம் துறைமுகத்திற்கு வந்த விருந்தாளி !

சம்விதான் காய திவாஸ் Vs மோடி முக்தி திவாஸ்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *