உலகம் முழுவதும் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்!!!

Published On:

| By Minnambalam Login1

current affairs tamil dengue

இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில். current affairs tamil dengue

வெக்டர்களின் மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய மையத்தின் (National Centre for Vector Borne Diesease Control) அறிக்கையின் படி, ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இந்தியாவில் 19,477 பாதிப்புகள் மற்றும் 16 மரணங்கள் டெங்குவால் நிகழ்ந்திருக்கிறது. current affairs tamil dengue

ஜூலை பத்தாம் தேதிவரை, கர்நாடகாவில் 7840 டெங்கு பாதிப்பு மற்றும் 7 மரணங்கள் டெங்குவினால் நடந்தேறியுள்ளது.

உலக நிலவரம்:

  • உலக சுகாதார அமைப்பின் படி, ஏப்ரல் முப்பது, 2024 வரை, உலகம் முழுவதும் 76 லட்சம் டெங்கு நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இதில் 34 லட்சம் பெயர்களுக்கு டெங்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
  • மேலும் மே 30, 2024 வரை, தொண்ணூறு நாடுகளில் டெங்கு பரவிவருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
  • இந்தியா போன்ற நாடுகளில், மழைக்காலம் தொடங்கியுள்ளதால், டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் இனப் பெருக்கம் வேகமாக நிகழும் என்றும், நகரமையமாக்கல் மேலும் இதற்கு உதவும் என்று உலகச் சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
  • ஆப்பிரிக்கா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா போன்ற பிராந்தியங்களுக்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டெங்கு நோய் பரவிவருகிறது. இதில் அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசியா பிராந்தியங்கள் தான் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
  • உலக அளவில், ஆசியாவில் தான் 70 சதவீதத்திற்கும் மேலான டெங்கு நோய் பதிவாகியுள்ளன. சமீபமாக ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும் டெங்கு பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படிப் பரவுகிறது?

  • ஏடிஸ் ஏஜிப்டி என்கிற கொசுதான், டெங்கு நோய்க்கிருமியை மனிதர்களைக் கடிப்பதின் மூலம் பரப்புகிறது.
  • பொதுவாக, இதன் பாதிப்பு கம்மியா தான் இருக்கும். ஆனால் சில சமயங்களில், இது அதிகமான ரத்த கசிவு, உடல் உறுப்பு சேதத்தைக்கூட விளைவிக்கும்.
  • தலைவலி, கண்களில் வலி ஏற்படுவது, ரத்த கசிவு, சொறி, தசைவலி போன்றவை தான் டெங்குவின் அறிகுறிகள்.

டெங்கு பரவுதலுக்கு உதவும் புதிய காரணிகள்:

  • உலக சுகாதார அமைப்பின் படி, பருவநிலை மாற்றம், நகரமையமாக்கல், மாறி வரும் மனித நடவடிக்கைகள் போன்றவை டெங்கு கிருமி பரவுவதை வேகப்படுத்திவருகின்றன.

மாணவர்களுக்கான குறிப்பு :

  • UPSC Civil Service GS 2 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
  • UPSC Civil Service Prelims மற்றும் TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
  • பொதுச்சுகாதாரம் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தி தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

-அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

சிபிஐக்கு எதிராக மேற்கு வங்காளம் தொடுத்த வழக்கு ஏற்கத்தக்கது!!

தேசிய கோபால் ரத்னா விருது-2024

தேசிய கல்விக் கொள்கை மீளாய்வுச் சந்திப்பு!.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel