எட்டு முக்கியத் தொழில்களில் ஒன்றான நிலக்கரித்துறை இந்த ஆண்டு மே மாதம் 10.2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. current affairs tamil core industry
இந்த விவரம், வர்த்தகம் மற்றும் தொழில்முறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘எட்டு முக்கியத் தொழில்துறைகளின் குறியீடுகள்’ அறிக்கையில் உள்ளது. current affairs tamil core industry
கடந்த ஆண்டு மே மாதம் நிலக்கரித்துறையின் குறியீடு 167.6 புள்ளிகளாக இருந்தது, இந்த ஆண்டு மே மாதத்திற்கான குறியீடு 184.7 புள்ளிகள் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த எட்டு முக்கியத் தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீடு முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதம் 6.3% வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு நிலக்கரித்துறையின் வளர்ச்சி ஒரு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
நிலக்கரித்துறையின் வளர்ச்சி எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைய உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
எட்டு முக்கியத் தொழில்கள் எவை?
- நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு(Natural Gas), விவசாய உரம், எஃகு (steel), மின்சாரம், காரை (Cement) மற்றும் கச்சா எண்ணெய்யிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் (Refinery Products).
- நமது நாட்டின் தொழில்துறை உற்பத்திக் குறியீடு (Index of Industrial Production) மிக முக்கியமான ஒரு அளவுகோல் ஆகும்.
- நமது நாட்டின் தொழில்துறை உற்பத்தியின் அளவை இது குறிக்கிறது. இதன் அறிக்கை ஒவ்வொரு மாதமும், மத்தியப் புள்ளியியல் அமைப்பால் (Central Statistical Organization) வெளியிடப்படும்.
- இதன் அடிப்படை ஆண்டு 2011-12 ஆகும். அதாவது 2011-12 ஆண்டிலிருந்து உற்பத்தி அளவை அடிப்படையாகக் கொண்டுதான் தொழில்துறையின் வளர்ச்சி கணக்கிடப்படும்.
- மேற்குறிப்பிட்ட எட்டுத் தொழில்கள் இந்த ஒரு பட்டியலின் பகுதியாகும். மொத்தத் தொழில்துறை குறியீட்டில் இந்த எட்டுத் தொழில்களின் பங்கு 40.27 சதவீதமாகும்.
- நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடுவதற்கு இந்தக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
எட்டு முக்கிய தொழில்களின் மதிப்பு:
கச்சா எண்ணெய்யிலிருந்து சுத்திகரிக்கப்பட்டப் பொருட்கள் துறை – 28.04%
மின்சாரத் தொழில்துறை – 19.85%
எஃகு தொழில்துறை – 17.92%
நிலக்கரித் தொழில்துறை – 10.33%
கச்சா எண்ணெய் தொழில்துறை – 8.98%
இயற்கை எரிவாயுத் தொழில்துறை – 6.88%
காரை தொழில்துறை – 5.37%
விவசாய உரத் தொழில்துறை – 2.63%
மாணவர்களுக்கான குறிப்பு :
- UPSC Civil Service GS 3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
- UPSC Civil Service Prelims மற்றும் TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
- பொருளாதார வளர்ச்சி சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தி தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
-அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
உலக பாரம்பரியக் குழுவின் நாற்பத்து ஆறாவது அமர்வு
ஏழாவது அட்டவணையின் முக்கியத்துவம்!!!