இமாச்சலப் பிரதேசம் சிம்லா மாவட்டத்தின் சமேஷ் என்ற கிராமத்தில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததாகவும் 28 பேரைக் காணவில்லை என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் காந்தி தெரிவித்துள்ளார். current affairs tamil cloud burst
மேகவெடிப்பு என்றால் என்ன?
- பெரும்பாலும் மலைப்பாங்கான பிரதேசங்களில் ஏற்படும் இயற்கை நிகழ்வாக மேகவெடிப்பு பார்க்கப்படுகிறது.
- சுமார் 20 முதல் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கு மேல் மழைப்பொழிவு ஏற்பட்டால் அது மேக வெடிப்பு எனக் கணக்கிடப்படுகிறது.
- தென்மேற்கு பருவமழை காலத்தில் மேக வெடிப்பு நிகழ்வுகள் மிகவும் பொதுவானவை.
- பருவமழைக் காலங்களில், கனமான தண்ணீர் துளிகளுடன் மேகம் தவழ்ந்து வரும்பொழுது தரையிலிருந்து மேல் எழும்பும் வெப்பமான காற்று மழைத்துளி விழுந்து விடாத வண்ணம் தடுக்கும்.
- கிட்டத்தட்ட மேகத்தின் வெளியே வந்துவிட்ட நீரை மீண்டும் மேகத்திற்கு உள்ளேயே இந்த வெப்பக்காற்று அனுப்பும்.
மேகவெடிப்பினால் ஏற்படும் விளைவுகள்: current affairs tamil cloud burst
- இவ்வாறு கனமான தண்ணீர் துளிகளை மேகத்திற்கு அனுப்பும் வெப்பக்காற்று அழுத்தமே ஒரேநேரத்தில் மொத்தமாக மழையை கொட்டச் செய்துவிடும்.
- இதனால் துளித் துளியாய் அல்லாமல், அருவி போல மழைநீர் கொட்டுவதால் அதன் வீரியமும் வேகமும் மிக அதிகமாக இருக்கும்.
- இதனுடன் காற்றின் வேகம் போன்றவை சேரும்போது அதன் வீரியம் மேலும் அதிகரிக்கும்.
- இதனால்தான் மேக வெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு கடுமையான நிலச்சரிவு மற்றும் அதிக அளவிலான இடிமின்னல் போன்றவை ஏற்பட்டு சில மணி நேரங்களில் பெரும் சேதங்கள் ஏற்படுகின்றன.
மேக வெடிப்புகள் எங்கே, எப்படி நிகழ்கின்றன?
- இந்தியாவில் வடகிழக்கு மற்றும் மத்திய இமயமலையின் மலைப்பகுதிகளில் மேகவெடிப்பு மிகவும் பொதுவானது.
- இது ஜூன் மற்றும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவக்காற்று அரேபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் இருந்து புறப்பட்டு சமவெளிகளை கடந்து இந்தியாவின் மலைப்பாங்கான வடபகுதியை நோக்கி நகரும் போது இது நிகழ்கிறது.
- இமாச்சலப் பிரதேசம் உத்தரகாண்ட் ஜம்மு மற்றும் காஷ்மீர் லடாக் சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் போன்ற இந்தியாவின் இமயமலை மாநிலங்கள் மற்றும்,
- யூனியன் பிரதேசம் இந்த இயற்கைப் பேரழிவின் காரணமாக பெரும் உயிர் மற்றும் உடைமை இழப்புகளை அடிக்கடி காண்கிறது.
மாணவர்களுக்கான குறிப்பு:
1. UPSC Civil Service GS-1 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. புவியியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
பூஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
இந்தியாவிற்கு வரும் ஆப்பிரிக்க சிறுத்தைகள் !