ஆசியாவிலேயே முதன்முறை… வியக்க வைக்கும் சென்னை

Published On:

| By Minnambalam Login1

current affairs tamil chennai

போரூர் டூ ஆழ்வார் திருநகர் வரை அமைக்கப்பட்டு வரும் ஈரடுக்கு மெட்ரோ ரயில் பாதையில் ஒரே சமயத்தில் 4 ரயில்களில் பயணம் செய்ய முடியும் என்றும் இந்த மாதிரியான ஒரு திட்டம் ஆசியாவிலேயே முதன்முறையாகச் செயல்வடிவம் பெற உள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. current affairs tamil chennai 

  • சென்னையில் முதன்முதலாக மெட்ரோ ரயில் சேவை 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • மொத்தம் 54.1 கிலோமீட்டர் நீளம் கொண்ட பச்சை மற்றும் நீலம் ஆகிய இரண்டு வழி பாதைகளில் முதற்கட்டமாக 42 வண்டிகள் இயக்கப்பட்டன.

நோக்கம்: current affairs tamil chennai 

  • மெட்ரோ சேவை தொடங்கப்பட்ட பிறகு சென்னை மக்களுக்கு அது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
  • எந்தவித போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் மக்கள் குறித்த நேரத்திற்குள் தங்களின் பயணத்தை மேற்கொள்ள முடிந்தது.
  • ஆகவே தமிழக அரசு இந்தத் திட்டத்தை மதுரை, கோவை என சில மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தி வருகிறது.

இதனால் ஏற்படும் பயன்கள்:

  • சென்னையில் விமானநிலையம் முதல் தொடங்கி கோயம்பேடு வழியாகச் சென்னை சென்ட்ரல் வரை ஒரு பாதையும்,
  • மற்றொரு பாதை சென்ட்ரல் தொடங்கிக் கிண்டி வழியாக ஏர்போர்ட் வரையிலும் இயக்கப்பட்டு வருகிறது.
  • அதன் தொடர்ச்சியாக இப்போது சென்னையில் புதுமையான இரட்டை அடுக்கு மெட்ரோ திட்டம் செயல்வடிவம் பெற்றுவருகிறது.
  • இதில் ஒரே நேரத்தில் 4 ரயில்களை இயக்க முடியும். ஆசியாவிலேயே இந்த 4 வழி மெட்ரோ பாதை வடபழனி தொடங்கி ஆழ்வார் திருநகர் வளசரவாக்கம் காரம்பாக்கம் ஆலப்பாக்கம் ஆகிய இரண்டு வெவ்வேறு அடுக்குகளில் மொத்தம் 5 கி.மீ மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஆசியாவிலேயே முதல்முறை அமைக்கப்படவுள்ளது:

  • சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகளின் அறிக்கையின்படி, கிட்டத்தட்ட அனைத்து பைலிங் பணிகள் 99% நிறைவடைந்துள்ளது.
  • 78%, பைல் கேப் நிறுவும் வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று சொல்கிறார்கள்.
  • நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சில சிக்கல்கள்தான் பாலம் அமைக்கப்படும் பணியை விடச் சவால் நிறைந்ததாக இருந்தது என்றும் கட்டுமான அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
  • பூமிக்கு அடியில் மெட்ரோ ரயிலில் பறந்து அனுபவம் பெற்ற மக்கள் இனி இரட்டை அடுக்கு பாதைகளில் பயணம் செய்வது ஒரு புதுமையான அனுபவத்தை வழங்கப் போகிறது.

மாணவர்களுக்கான குறிப்பு:

1. UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. அறிவியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

பூஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

தமிழ்ப்புதல்வன் திட்டம்: விண்ணப்பிப்பது எப்படி?

இனி யுபிஎஸ்சி தேர்வுகளில் பயோமெட்ரிக் முறை!!!!

மொய்தாம்கள் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு !

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share