டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு: முதலமைச்சர் உத்தரவு!

Published On:

| By Monisha

Compensation of Rs 13500 per hectare to Delta Farmers

காவிரி ஆற்றில் கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் பெறப்படாததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடியால் பாதிக்கப்பட்டுள்ள பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீட்டுத் தொகையாக வழங்கிட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், குறுவை செய்வதற்கு ஏதுவாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 12-6-2023 அன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.

ADVERTISEMENT

ஆனால், காவிரி ஆற்றில் கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் தொடர்ந்து பெறப்படா த காரணத்தா ல், மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்துக்கு போதிய அளவு தண்ணீர் திறந்துவிட இயலாத நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 40,000 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வாடிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.

பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீடாக வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடிப் பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாததால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அதனால் இந்த ஆண்டு நெல் விளைச்சல் குறைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் நெல் உற்பத்தியில் நான்கில் மூன்று பங்கு டெல்டா பகுதியில் பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மாநிலத்தின் நெல் உற்பத்தியைப் பாதிக்கக்கூடியதாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லியோ ட்ரெய்லரில் பிரியா ஆனந்த்..! நோட் பண்ணுங்கப்பா..!

World Cup 2023: ரச்சின், கான்வே அபாரம், நியூசிலாந்து இமாலய வெற்றி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share