நடந்து முடிந்த காமன்வெல்த் தொடரில் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. அதன் முழு பட்டியல் பின்வருமாறு.
கடந்த ஜூலை 29 ஆம் தொடங்கிய காமன்வெல்த் தொடர் நேற்றோடு (ஆகஸ்ட் 8 ) நிறைவடைந்தது. இதில், இந்தியா சார்பில் 106 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 210 பேர், 16 விதமான விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றனர்.
இந்த காமன்வெல்த் தொடரில் இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4ஆவது இடத்தை பிடித்தது.

பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளின் விவரம்…
22 தங்கம்
- மீராபாய் சானு – பளு தூக்குதல் மகளிர் 49 கிலோ
- வினேஷ் போகத் – மல்யுத்தம் – மகளிர் ஃப்ரீஸ்டைல் 53 கிலோ
- பிவி சிந்து – பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர்
- லக்ஷ்யா சென் – பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர்
- நிகத் ஜரீன் – குத்துச்சண்டை பெண்கள் லைட் ஃப்ளைவெயிட்
- ரவி குமார் தாஹியா – மல்யுத்தம் – ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ
- நவீன் – மல்யுத்தம் – ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 74 கிலோ
- சரத் கமல் – டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு
- நீத்து கங்காஸ் – குத்துச்சண்டை மினிமம் வெயிட்
- அமித் பங்கல் – குத்துச்சண்டை ஃப்ளைவெயிட்
- பஜ்ரங் புனியா – மல்யுத்தம் – ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ
- சாக்ஷி மாலிக் – மல்யுத்தம் – பெண்கள் ஃப்ரீஸ்டைல் 62 கிலோ
- தீபக் புனியா – மல்யுத்தம் – ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 86 கிலோ
- ஜெர்மி லால்ரின்னுங்கா – பளு தூக்குதல் ஆடவர் 67 கிலோ
- அச்சிந்தா ஷூலி – பளு தூக்குதல் ஆடவர் 73 கிலோ
- லவ்லி சௌபே, பிங்கி, நயன்மோனி சைகியா, ரூபா ராணி டிர்கி – லான் பவுல்ஸ் நால்வர் ஆட்டம்
- சரத் கமல், சத்யன் ஞானசேகரன், ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி – டேபிள் டென்னிஸ் ஆடவர் அணி
- சுதிர் – பாரா பவர் லிஃப்டிங் ஆடவர் ஹெவிவெயிட்
- பவினா படேல் – டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர்
- எல்டோஸ் பால் – ஆடவர் டிரிபிள் ஜம்ப்
- சரத் கமல், ஸ்ரீஜா அகுலா – டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு
- சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி – பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவு

16 வெள்ளி:
- இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
- இந்திய ஆடவர் ஹாக்கி அணி
- பேட்மிண்டன் கலப்பு அணி
- அன்ஷு மாலிக் – மல்யுத்தம் – பெண்கள் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ
- முரளி ஸ்ரீசங்கர் – ஆடவர் நீளம் தாண்டுதல்
- சரத் கமல், சத்யன் – டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர்
- விகாஸ் தாக்கூர் – பளு தூக்குதல் ஆடவர் 96 கிலோ
- சுஷிலா தேவி லிக்மாபம் – ஜூடோ மகளிர் 48 கிலோ
- பிந்த்யாராணி தேவி – பளு தூக்குதல் மகளிர் 55 கிலோ
- துலிகா மான் – ஜூடோ மகளிர் 78+ கிலோ
- சங்கேத் சர்கார் – பளு தூக்குதல் ஆடவர் 55 கிலோ
- அவினாஷ் சேபிள் – ஆடவர் 3000 மீ ஸ்டீபிள்சேஸ்
- பிரியங்கா கோஸ்வாமி – மகளிர் 10 கிலோ மீட்டர் ரேஸ் வாக்
- தினேஷ் குமார், சந்தன் குமார் சிங், சுனில் பகதூர், நவநீத் சிங் – லான் பவுல்ஸ் ஆடவர் அணி – நால்வர் பிரிவு
- அப்துல்லா அபூபக்கர் – ஆடவர் டிரிபிள் ஜம்ப்
- சாகர் அஹ்லாவத் – குத்துச்சண்டை ஆடவர் சூப்பர் ஹெவிவெயிட்
23 வெண்கலம்
- தேஜஸ்வின் சங்கர் – ஆடவர் உயரம் தாண்டுதல்
- திவ்யா கக்ரன் – மல்யுத்தம் – மகளிர் 68 கிலோ
- மோஹித் கிரேவால் – மல்யுத்தம் – ஆடவர் 125 கிலோ
- ஜெய்ஸ்மின் – குத்துச்சண்டை மகளிர் லைட்வெயிட் 60 கிலோ
- பூஜா கெலாட் – மல்யுத்தம் – ஃப்ரீஸ்டைல் மகளிர் 57 கிலோ
- பூஜா சிஹாக் – மல்யுத்தம் – ஃப்ரீஸ்டைல் மகளிர் 76 கிலோ
- ஹுசாமுதீன் – ஆடவர் குத்துச்சண்டை ஃபெதர்வெயிட்
- குருராஜா பூஜாரி – பளு தூக்குதல் ஆடவர் 61 கிலோ
- விஜய் குமார் யாதவ் – ஜூடோ ஆடவர் 60 கிலோ
- ஹர்ஜிந்தர் கவுர் – மகளிர் பளுதூக்குதல் 71 கிலோ
- லவ்பிரீத் சிங் – பளுதூக்குதல் ஆடவர் 109 கிலோ
- சவுரவ் கோசல் – ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர்
- குர்தீப் சிங் – பளுதூக்குதல் ஆடவர் 109+ கிலோ
- தீபக் நெஹ்ரா – மல்யுத்தம் – ஃப்ரீஸ்டைல் ஆடவர் 97 கிலோ
- சோனால்பென் படேல் – பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு
- ரோகித் டோகாஸ் – குத்துச்சண்டை ஆடவர் வெல்டர்வெயிட் 67 கிலோ
- இந்திய மகளிர் ஹாக்கி அணி
- சந்தீப் குமார் – ஆடவர் 10,000 மீட்டர் நடைப்பந்தயம்
- அன்னு ராணி – மகளிர் ஈட்டி எறிதல்
- சவுரவ் கோசல் மற்றும் தீபிகா பலிக்கல் – ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர்
- கிடாம்பி ஸ்ரீகாந்த் – பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு
- காயத்ரி கோபிசந்த், ட்ரீசா ஜாலி – பேட்மிண்டன் மகளிர் இரட்டையர்
- சத்யன் – டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு
க.சீனிவாசன்
காமன்வெல்த் நிறைவு: 61 பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் இந்தியா!
