எகிறியது வர்த்தக சிலிண்டர் விலை! இந்த முறை எவ்வளவு ஏறியிருக்கு பாருங்க!

By Mathi

|

Published on 1 Jun 2026, 6:52 AM

Commercial LPG Price

நாடு முழுவதும் இன்று (ஜூன் 1, 2026) வர்த்தக சிலிண்டர் விலையை (Commercial LPG Price) எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் மேற்கு ஆசிய போர்ச்சூழல் காரணமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது.

ADVERTISEMENT

2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வணிக சிலிண்டரின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

  • ஜனவரி 1: சென்னையில் புத்தாண்டு தொடக்கத்திலேயே வணிக சிலிண்டர் விலை ₹110 உயர்த்தப்பட்டு, ₹1,849.50 ஆக விற்பனையானது.
  • பிப்ரவரி 1: அடுத்த மாதமே மீண்டும் ₹50 விலை அதிகரிக்கப்பட்டு, சிலிண்டர் விலை ₹1,899.50 ஐ எட்டியது.
  • மார்ச் 1: மார்ச் மாதத் தொடக்கத்தில் ₹29.50 உயர்த்தப்பட்டு ₹1,929.00 ஆக இருந்த விலை, அடுத்த ஒரே வாரத்தில் (மார்ச் 7) திடீரென ₹114.50 அதிரடியாக உயர்ந்து ₹2,043.50 ஆக மாறியது.
  • ஏப்ரல் 1: ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் மேலும் ₹203 கணிசமாக உயர்த்தப்பட்டதால், வணிக சிலிண்டரின் விலை ₹2,246.50 ஆக உயர்ந்தது.
  • மே 1: சர்வதேசக் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, மே மாதத்தில் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஒரே அடியாக ₹1,013 எகிறி, புதிய உச்சமாக ₹3,259.50 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று (ஜூன் 1) மீண்டும் உயர்வு!

கடந்த மே மாதம் ₹3,259.50 என்ற உச்சத்தைத் தொட்ட நிலையில், இன்று ஜூன் 1-ஆம் தேதி முதல் வணிக சிலிண்டர் விலை சென்னையில் மேலும் ₹23.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ₹3,283.00 என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது. தொடர்ந்து சிலிண்டர் விலை ஏறிக்கொண்டே போவதால் ஹோட்டல் அதிபர்கள், சிறு வணிகர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். அதேநேரம், பொதுமக்கள் பயன்படுத்தும் 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி நீடிப்பது மட்டுமே தற்போதைய ஒரே ஆறுதல்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel