சென்னையில் வர்த்தக சிலிண்டர் விலை குறைந்தது!

Published On:

| By Selvam

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான வர்த்தக சிலிண்டர் விலை ரூ.96 குறைந்து, ரூ.2045க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமில்லாமல், ரூ.1068.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பைப் பொறுத்து, மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றி அமைப்பது வழக்கம்.

அந்தவகையில், செப்டம்பர் மாதத்திற்கான சிலிண்டர் விலை இன்று செப்டம்பர் 1ஆம் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னையில், வணிக பயன்பாட்டுக்கான வர்த்தக சிலிண்டர் விலை ரூ.96 குறைந்து, ரூ.2045-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வர்த்தக சிலிண்டர் விலை இதற்கு முன்பாக, ரூ.2300 வரை விற்பனை செய்யப்பட்டது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்தவித மாற்றமுமில்லாமல், ரூ. 1068.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து மாற்றமின்றி ரூ.1068.50-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த மாதமும் அதே விலையில் விற்பனையாகிறது.

செல்வம்

ஆயிரம் ரூபாயை கடந்த சிலிண்டர் விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share