வணிக சிலிண்டர் விலை மீண்டும் ’கடும்’ உயர்வு.. டீ கடை, ஹோட்டல் பக்கமே போக முடியாது!

Published On:

| By Mathi

Commercial LPG Cylinder Prices

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மிக கடுமையாக ரூ.203 உயர்ந்துள்ளது. 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர் விலை ரூ2043.50-ல் இருந்து ரூ2246.50 ஆக உயர்ந்துள்ளது.

ஈரான் போர், ஹோர்முஸ் நீரிணை மூடல் ஆகியவற்றால் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஹோட்டல்கள், டீ கடைகளில் கடுமையான விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல ஹோட்டல்கள் நடத்த முடியாமல் மூடப்பட்டுள்ளன

ADVERTISEMENT

இந்த நிலையில் வழக்கம் போல உயர்த்தப்படும் வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதுவும் சிலிண்டர் விலை ரூ203 அதிகரித்துள்ளது. இதனால் ஹோட்டல், டீ கடைகளில் மீண்டும் விலை உயர்வு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share