குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை!

Published On:

| By christopher

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.84.50 குறைந்து 1,937 ரூபாய்க்கு இன்று (ஜூன் 1) முதல் விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்தவகையில், ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு உபயோக பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

அதன்படி ஜூன் 1 ஆம் தேதியான இன்று, புதிய விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூ.84.50 ரூபாய் குறைந்துள்ளது.

நேற்று வரை (கடந்த மாதம்) 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 2,021.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஜூன் 1 ம் தேதியான இன்று முதல் ரூ.84 குறைந்து 1,937 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த மாதம் 171 ரூபாய் குறைந்த நிலையில், இந்த மாதம் 84.50 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி 1,180 .50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT

கிறிஸ்டோபர் ஜெமா

செங்கோல் கூட்டத்திற்கு சேகர்பாபுவை அனுப்பியது ஏன்? : முதல்வர் விளக்கம்!

சென்னை தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share