வணிக சிலிண்டர் விலை உயர்ந்தது!

Published On:

| By Selvam

commercial gas cylinder price increase

பிப்ரவரி மாதத்தின் முதல் நாளான இன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.12.50 உயர்ந்து ரூ.1,937-க்கு விற்பனை செய்யப்படுறது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து ஒவ்வொரு மாதமும் வணிக சிலிண்டர்கள் விலை நிர்ணயம் செய்யப்படு வருகிறது.

அந்தவகையில், வணிக சிலிண்டர் விலை இன்று ரூ.12.50 விலை அதிகரித்துள்ளது. சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக சிலிண்டர் ரூ.1,924.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ரூ.12.50 உயர்ந்து ரூ.1,937-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல், ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக சிலிண்டர் விலை உயர்வால் ஹோட்டல்களில் உணவு பொருட்கள் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்: அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் எவ்வளவு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share