வணிக சிலிண்டர் விலை குறைந்தது!

Published On:

| By Kavi

வணிக ரீதியான எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை இன்று (நவம்பர் 1) குறைந்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைப்பது போல், மாதம் மாதம் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

அதன்படி நவம்பர் மாதத்தின் தொடக்க நாளான இன்று சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் வணிக சிலிண்டருக்கான விலையை ரூ.115.50 குறைத்துள்ளன.

ADVERTISEMENT

இதனால் சென்னையில், ரூ.2,009.50க்கு விற்பனையான 19 கிலோ கொண்ட வணிக சிலிண்டர் இன்று முதல் 1,893 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எனினும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை.

ADVERTISEMENT

வீட்டு உபயோக சிலிண்டர் சென்னையில் தற்போது விலை ரூ.1,079க்கு விற்கப்படுகிறது. மும்பை மற்றும் கொல்கத்தாவில் முறையே ரூ.1,052.5 மற்றும் ரூ.1,068.5க்கு விற்பனையாகின்றன.

பிரியா

தொடர் கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share