சென்னையில் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை இன்று (ஏப்ரல் 1) குறைந்துள்ளது. Commercial cylinder price reduced
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிறுவனத்திற்கு ஏற்ப வீடு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரியாவு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அந்தவகையில், சென்னையில் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்துள்ளது. ரூ.1,965-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக சிலிண்டர், ரூ.1,921.50-ஆக குறைந்துள்ளது. புதிய விலையானது இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அதேநேரம், வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமுமின்றி ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Commercial cylinder price reduced