வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் குறைப்பு!

Published On:

| By christopher

commercial cylinder price reduced today

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் ரூ.58 குறைக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச சந்தை மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் 1ஆம் தேதி மாற்றியமைத்து அறிவிக்கும்.

ADVERTISEMENT

அதன்படி, கடந்த நவம்பர் 1ஆம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் ரூ. 101.50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.1999.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையில் இன்று ரூ.58 திடீரென குறைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இன்று முதல் சிலிண்டர் ரூ.1,942க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

அதே நேரத்தில் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.918.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி சென்னையில் 544ஆவது நாளாக இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஒருபுறம் எச்சரிக்கை… மறுபுறம் நவீன ஆயுத சப்ளை: இஸ்ரேலில் அமெரிக்காவின் இரட்டை நிலை!

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று  வெளியாகிறது!

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share