சாவர்க்கர் குறித்து பேச்சு… நெட்டிசன்கள் ட்ரோல்… வருத்தம் தெரிவித்த சுதா கொங்காரா

Published On:

| By Kavi

இயக்குநர் சுதா கொங்காரா சாவர்க்கர் குறித்து சொன்ன தகவலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அவரது இயக்கத்தில் உருவாகவுள்ள புறநானூறு படம் குறித்து யூடியூப் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது சுதா கொங்காரா, “சாவர்க்கர் மிகப்பெரிய தலைவர். அவர் திருமணம் செய்துகொண்டு, தனது மனைவியை படிக்க சொல்லி கட்டாயப்படுத்தினார். அந்த காலத்தில் பெண்கள் படிக்க மாட்டார்கள். அதனால் அவரது மனைவி படிக்க மறுத்திருக்கிறார்.

இந்நிலையில் தினசரி அவரது மனைவி பள்ளிக்கு செல்லும் போது பலரும் கிண்டல் செய்திருக்கிறார்கள். இதனால் அவரது கையை பிடித்து பள்ளிக்கு இழுத்துச் சென்று படிக்க வைத்திருக்கிறார் சாவர்க்கர்” என்று கூறியிருந்தார் இயக்குநர்.

இது தவறான கருத்து என இணையதளவாசிகள் சுதா கொங்காராவை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். அது, ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலேவின் கதை என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில் தனது தவறான கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள சுதா கொங்காரா, “எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன்.

ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன்.

மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக்காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்” என்று விளக்கமளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

NITI Aayog : சந்திரபாபுவுக்கு 20 நிமிடம் அனுமதி… ஆனால் எனது மைக் ஆப் – கொந்தளித்த மம்தா

“வரி வாங்க தெரியுது, திரும்ப கொடுக்க தெரியாதா” : பட்ஜெட்டை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share