தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதியை 2005-ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு அறிவித்தது. தமிழ் செம்மொழி தகுதி பெற்றதைக் கொண்டாட 2010-ல் கோவையில் ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை’ நடத்தினார் கலைஞர்.
அந்த கோவை செம்மொழி மாநாட்டின் போது, “கோவை மாநகரில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும்” என்று கலைஞர் அறிவித்தார். 2021-ல் முதல்வர் ஸ்டாலின், கோவை காந்திபுரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நடைபாதை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும் உலகத் தரத்தில் செம்மொழிப் பூங்கா 2 கட்டங்களாக அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து 18.12.2023-ல் கோவை செம்மொழிப் பூங்காவுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
செம்மொழிப் பூங்கா ‘உலா’..
- கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் செம்மொழிப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது.
- செம்மொழிப் பூங்காவின் முதல் கட்டத்தை 45 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்க ரூ.208.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- இப் பூங்காவில் தாவரவியல் பூங்கா, சூரியதகடு. சிற்பங்கள், பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் செம்மொழி பூங்காவிற்கு எடுத்து வருதல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
- இப்பூங்காவில்
செம்மொழி வனம்
மூலிகை தோட்டம்
மகரந்த தோட்டம்
நீர்த் தோட்டம்
மணம்கமிழ் தோட்டம்
பாலைவனத் தோட்டம்
மலர்த் தோட்டம்
மூங்கில் தோட்டம்
நட்சத்திர தோட்டம்
ரோஜா தோட்டம்
பசுமை வனம்
ஆகிய 23 தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- சங்க இலக்கியங்களில் இடம்பெற்ற
செண்பக மரம்
கல் இலவு
மிளகு மரம்
கடல் திராட்சை
திருவோட்டு மரம்
கலிபுடா
வரிகமுகு
மலைபூவரசு
எலிச்சுழி
குங்குமம் மரம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. - 2000-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் ரோஜா தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன
- கடையேழு வள்ளல்களின் கற்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
- நுழைவுச்சீட்டு வழங்குமிடம் – 500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம்
- தோட்டத் தொழிலாளர்களுக்கு அறை,உணவகம்,ஒப்பனை அறை
- சில்லறை விற்பனை நிலையம்
- செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
- தரைத் தள வாகன நிறுத்துமிடத்தில் மொத்தம் 453 கார்கள், 10 பேருந்துகள் மற்றும் 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்த முடியும்.
- ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு வடிகால் அமைப்பு 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதைகளுடன் சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது.
- மகளிர் சுயஉதவி குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக மதி அங்காடி அமைக்கப்பட்டுள்ளது.
- உலகத் தரத்தில் உயர்தர உடற்பயிற்சிக் கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம்
- 4,000 சதுர அடி பரப்பளவில் உள்வன மாதிரி காட்சியமைப்பு (Terrarium)
- குழந்தைகள் விளையாடுவதற்கு 14,000 அடி பரப்பளவில் சதுர விளையாட்டுத்திடல்
- சிறுவர்களுக்கான உள்விளையாட்டு அறை
- மாற்றுத்திறனாளிகள் விளையாடுவதற்கு தனித்தன்மையான விளையாட்டுத்திடல் அமைக்கப்பட்டுள்ளன.
- பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் கூடிய அருங்காட்சியகம்
- தாவரவியல் அருங்காட்சியகம்
- படிப்பகம்
- முதியோர்களும் மாற்றுத்திறனாளிகளும் பயணிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் உள்ளன.
