கோவை மேயர் வேட்பாளர் ரங்கநாயகி?

Published On:

| By Selvam

நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் மற்றும் கோவை மேயர் கல்பனா ஆகியோர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அந்தவகையில், இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற உள்ள நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான வேட்பாளராக ராமகிருஷ்ணன் நேற்று (ஆகஸ்ட் 4) அறிவிக்கப்பட்டார். இதுதொடர்பாக ஸ்டாலின் கொடுத்து அனுப்பிய கவர், உள்ளே மின்னம்பலம் குறிப்பிட்ட நெல்லை மேயர் பெயர் என்ற தலைப்பில் நேற்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில், கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை (ஆகஸ்ட் 6) நடைபெற உள்ள நிலையில், வேட்பாளரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு தலைமையில் இன்று கோவையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த ரங்கநாயகி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை 6-ஆம் தேதி இறுதிப் பட்டியல் தயார்… இனிமேல் கோவை மேயராக வரப்போகிறவர் யார்? என்று மின்னம்பலத்தில் வெளியான செய்தியில், மேயர் வேட்பாளராக கவுன்சிலர் ரங்கநாயகியின் பெயர் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

TNPL 2024: முதன்முறையாக கோப்பையை வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ்

வயநாடு பேரழிவு… பாண்டியாறு – புன்னம்புழா திட்டம் எப்போது? ஈஸ்வரன் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share