கோவை குண்டு வெடிப்பு : 28 ஆண்டுகள் கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த குற்றவாளி டெய்லர் ராஜா கைது!

Published On:

| By Minnambalam Desk

Coimbatore Blast Case

கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியான டெய்லர் ராஜா, கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Coimbatore Bomb Blast Case

கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 58 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் 188 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். குண்டு வெடிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த கோவையை சேர்ந்த டெய்லர் ராஜா, முஜிபூர் ரகுமான் , அயூப் ஆகிய 3 பேரை 28 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜாவை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜாவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசர் கைது செய்து கோவை அழைத்து வந்துள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுத்தால் ஒரு நபருக்கு ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்படும். தகவல் அளிப்பவர்களின் பெயர் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் என சிபிசிஐடி காவல்துறையினர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share