ADVERTISEMENT

காபி வித் காதல்: ரெட் ஜெயண்ட் வெளியிட்ட நியூ அப்டேட்!

Published On:

| By Jegadeesh

முன்னணி நடிகர்களின் படங்களைத் தமிழகத்தில் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது உதய நிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்.

சமீபத்தில் வெளியான விக்ரம், கோப்ரா, டைரி ஆகிய படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக வெந்து தணிந்தது காடு, கேப்டன், விடுதலை என மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களையும் வெளியிட உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் , அரண்மனை 3 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் ‘காபி வித் காதல்’ படம் உருவாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை குஷ்பூவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.


இப்படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா, ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி , அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இன்று செப்டம்பர் 5 வெளியிட்டுள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மு.வா.ஜெகதீஸ் குமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share