தனது முதல் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் கோகோ காஃப்!

Published On:

| By christopher

Coco Gauff beat Sabalenka for French Open crown

உலகின் நம்பர் 1 வீராங்கனையை வீழ்த்தி முதன்முறையாக பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியுள்ளார் கோகோ காஃப். Coco Gauff beat Sabalenka for French Open crown

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் பிரஞ்சு ஓபன் டென்னிஸ் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா மற்றும் நம்பர் 2 வீராங்கனை கோகோ காஃப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றனர்.

அதன்படி பிலிப் சார்ட்டியர் டென்னிஸ் மைதானத்தில் இன்று நடைபெற்ற பைனலில் கடும் எதிர்பார்ப்பிற்கிடையே இருவரும் மோதினர்.

முதல் செட்டில் இருவருமே கடுமையாக போராடிய நிலையில், 6-6 என்ற புள்ளியில் முடித்தனர். தொடர்ந்து நடைபெற்ற டைபிரேக்கரில் 7(5)-6 என்ற கணக்கில் சபலென்கா முதல் செட்டை கைப்பற்றினார்.

எனினும் 27 வயதான சபலென்காவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திய 21 வயதான கோகோ 6-2, 6-4 என்ற கணக்கில் அடுத்த இரண்டு செட்டுகளை கைப்பற்றி போட்டியை வென்றார்.

இதன்மூலம் 2023 ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்திற்குப் பிறகு தனது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியுள்ளார் கோகோ காஃப்.

2022 ஆம் ஆண்டு, 18 வயதான காஃப், அப்போதைய உலக நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக்கிற்கு எதிரான பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார். இருப்பினும், இந்த முறை, எந்தத் தவறும் செய்யாமல், கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share