ஆ.ராசா பேசிய ‘cock and bull story’ – அப்படின்னா என்ன?

Published On:

| By Aara

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை, கடுமையான எதிர்ப்புக்கிடையிலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் ஆகியவற்றின் ஆதரவுடன் நிறைவேற்றியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. bull story in parliament

தி.மு.க.வின் சார்பில் வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் இடம்பெற்ற ஆ.ராசா எம்.பி.யின் நேற்றைய (ஏப்ரல் 2) மக்களவை உரையில், ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் கிரண் ரிஜிஜு பொய்யாக பேசுகிறார் என்பதை குறிப்பிட, ‘Cock and Bull story’ என்ற மரபுத்தொடரை (idiom), பயன்படுத்தினார் ஆ.ராசா.

ADVERTISEMENT

அப்படி என்றால் என்ன? திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகர் கோவி லெனின் இது தொடர்பாக கூறுகையில்,

“உண்மையைப் போலவே தோற்றமளிக்கும் கவர்ச்சிகரமான, பொருத்தமற்ற, நம்பமுடியாத கதைகளைச் சொல்லி திசைதிருப்புவதையும், தவறான தகவல்களால் வழிநடத்துவதையும்தான் Cock and Bull story என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

ADVERTISEMENT

Cock என்பதும் Bull என்பதும் இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷயரின் வர்த்தகப் பகுதியான ஸ்டோனி ஸ்டார்ஃபோர்டில் உள்ள இரண்டு விடுதிகள்.

இரண்டிலும் தங்குபவர்களை ஈர்க்கவும், அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், அந்தக் காலத்தில் போட்டிப் போட்டு அவிழ்த்துவிடப்படும் கதைகளைத்தான் Cock and Bull story என்று சொல்வார்கள். கிரண் ரிஜிஜுவைப் போலவே உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கதை விட்டார்.

ADVERTISEMENT

கதைவிடும் விடுதியைப் போல, ஜனநாயகத்தின் உயர்ந்த அமைப்பான நாடாளுமன்றத்தை பா.ஜ.க. நடத்திக்கொண்டிருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறினார்” என்றார். bull story in parliament

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share